More
Categories: Cinema News latest news

எலியும் பூனையுமா இருந்து திருமணத்தில் கைகோர்த்த ராம்கி – நிரோஷா! இப்படி ஒரு காதல் கதையா?

Actor Ramki:தமிழ் சினிமாவில் 90களில் கனவு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் ராம்கி. அவருடைய அழகுக்கும் ஹேர் ஸ்டைலுக்கும் ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் அவரை சுற்றியே வந்தனர். அந்தளவுக்கு சார்மிங் ஹீரோவாக சாக்லேட் பாயாக வலம் வந்தார் ராம்கி.

தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் இருந்து வந்த ராம்கி ஆரம்பத்தில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். அதன் பிறகு அவரை பிரபலமாக்கிய திரைப்படமாக ஊமை விழிகள் திரைப்படம் அமைந்தது. அந்த படம் திரைப்படக் கல்லூரி மாணவர்களால் எடுக்கப்பட்ட படமாக அமைந்து பெரும் வெற்றிப் பெற்ற திரைப்படமாக மாறியது.

Advertising
Advertising

இதையும் படிங்க: ‘வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே’ பாடல் உருவானது இப்படித்தான் – இயக்குனர் சொல்றத கேளுங்க!..

அதிலிருந்தே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மீது ஒரு தனி மரியாதையே சினிமாவில் எழத் தொடங்கியது. இந்தப் படத்திற்கு பிறகு ராம்கி செந்தூரப்பூவே படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் பிரபலமானார். அதனை தொடர்ந்து சின்னப் பூவே மெல்ல பேசு திரைப்படம் ராம்கியின் கெரியரில் திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது.

இந்த நிலையில்தான் செந்தூரப்பூவே மற்றும் சின்னப்பூவே மெல்லப் பேசு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ராம்கியுடன் நிரோஷாவுக்கு  காதல் ஏற்பட்டது. செந்தூரப்பூவே படத்தின் போது இருவரும் எலியும் பூனையுமாகத்தான் இருந்தார்களாம். ஒரு சமயம் டிரெயின் சண்டை காட்சியில் நிஜமாகவே நிரோஷா தவறி விழ ராம்கிதான் காப்பாற்றினாராம்.

இதையும் படிங்க: அஜித் சம்பளம் இத்தனை கோடியா? உருட்டுனாலும் நியாயம் வேணாமாப்பா! பொளுந்துவிட்ட புளூசட்டை மாறன்

அதிலிருந்தே ராம்கி மீது நிரோஷாவுக்கு காதல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இவர்கள் காதலுக்கு நிரோஷா வீட்டில் எதிர்ப்பு வர ஒரு கட்டத்தில் நிரோஷா வீட்டை விட்டு வெளியேறி ராம்கியுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையாகிப் போக சரி திருமணம் செய்து வைக்கிறோம் என கூறி நிரோஷா வீட்டில் நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்தார்களாம்.

ஆனாலும் அந்த நேரத்திலும் சிலபல  பிரச்சினைகள் எழுந்து அதன் பிறகே நீண்ட பஞ்சாயத்துக்கு பிறகு இவர்கள் திருமணம் இனிதே நடந்தேறியிருக்கிறது. இன்று வரை இருவரும் ஆஸ்தான தம்பதிகளாக சினிமா துறையில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: விஜயகாந்த் எனக்கு செஞ்ச உதவி! 15 வருஷமா அவருக்காக இத செய்றேன் – கேப்டன் புகழ்பாடும் ஐசரி கணேஷ்

Published by
Rohini

Recent Posts