ராம்கி நடித்த சூப்பர்ஹிட் படங்கள் - ஒரு பார்வை

ramki and nirosha in maruthupandi
நடிகர்களில் ராம்கி படங்கள் என்றால் ஒரு காலத்தில் பட்டையைக் கிளப்பும். ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், சத்யராஜ் கால கட்டங்களில் தனக்கென தனி ஒரு பாணியைக் கையாண்டு தமிழ்த்திரை உலகில் முத்திரை பதித்தவர் நடிகர் ராம்கி.
எவ்வித இரட்டை அர்த்த வசனங்களோ, ஆபாசமோ இல்லாத படமாக இருக்கும். தாய்க்குலங்கள் இவரது படங்கள் என்றால் நம்பி திரையரங்கிற்குச் செல்லலாம் என்ற அளவில் தான் இவரது படங்கள் இருக்கும். பெரும்பாலான படங்கள் வெற்றியைத் தந்துள்ளன. இவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
சின்னப்பூவே மெல்லப்பேசு
1987ல் வெளியான இப்படத்தை இராபர்ட் இராஜசேகர் இயக்கியுள்ளார். எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின.
பிரபு, ராம்கி, நர்மதா, சுதா சந்திரன். சபீதா ஆனந்த், செந்தாமரை உள்பட பலர் நடித்துள்ளனர். சின்னப்பூவே மெல்லப்பேசு, காலேஜில் டெஸ்ட், என்னடா காதல், கண்ணே வா, கண்ணீர் சிந்தும், பூங்காற்றில், சங்கீத வானில், வாங்கடி வாங்கடி, ஏ புள்ள கருப்பாயி ஆகிய பாடல்கள் படத்தில் உள்ளன. இவற்றில் ஏ புள்ள கருப்பாயி பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.
இணைந்த கைகள்

inaintha kaigal
1990ல் என்.கே.விஸ்வநாதன் இயக்கத்தில் ஆபாவாணன் தயாரிப்பில் வெளியான பிரம்மாண்டமான படம் இணைந்த கைகள். அருண்பாண்டியன், ராம்கி இணைந்து நடித்து அசத்தியுள்ளனர். கியான் வர்மா இசை அமைத்துள்ளார்.
நிரோஷா, சிந்து, நாசர், செந்தில், ஸ்ரீவித்யா, குள்ளமணி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்களை எழுதியவர் ஆபாவாணன். அந்தி நேர தென்றல் காற்று, மலையோரம், ஆடி மாசம், மெல்ல மெல்ல உள்பட பல பாடல்கள் உள்ளன.
மருதுபாண்டி
1990ல் வெளியான இப்படத்தை மனோஜ்குமார் இயக்கினார். ராம்கி, சீதா, நிரோஷா, எஸ்.எஸ்.சந்திரன், செந்தில், கோவை சரளா, ராகவி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். சிங்கார செல்வங்களே, அடமும் எவாளும், பொம்பள இல்லாம, பாடி பாடி உள்பட பல பாடல்கள் உள்ளன.
வெள்ளையத்தேவன்
1990ல் வெளியான இப்படத்தை மனோஜ்குமார் இயக்கியுள்ளார். ராம்கி, கனகா, ஜனகராஜ், சித்ரா, சீமா, விஜயகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். நல்ல இசை தட்டு, தங்கச்சி, உச்சி மாலை, வானத்தில் இருந்து, காகம், பூந்தோட்டம் வளர்த்தேன், அக்கா மகளுக்கு, ஏத்தி வச்ச ஆகிய பாடல்கள் உள்ளன.
வனஜா கிரிஜா

vanaja girija
1994ல் வெளியான படம். கேயார் இயக்கிய வெற்றிப்படம் இது. நெப்போலியன், ராம்கி, விசு, மோகினி, ஊர்வசி, குஷ்பூ, தியாகு, நிழல்கள் ரவி, விவேக் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ரகங்கள். முன்னம் செய்த, ஒத்தையில, சிறகடிக்குது உள்பட பல பாடல்கள் உள்ளன.