பார்க்கிங் திரைப்படம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து வெளிவந்த பார்க்கிங் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்றதோடு இந்த படம் தேசிய விருதையும் பெற்றது.சென்னை போன்ற ஒரு நகரில் ஒரு வீட்டில் கார் நிறுத்துவது தொடர்பாக இருவருக்கு ஏற்படும் ஈகோவை அடிப்படையாக வைத்து பார்க்கிங் படத்தின் திரைக்கதையை அமைத்திருந்தார் ராம்குமார்.
இந்த படத்தை பார்த்த நடிகர் ரஜினி ராம்குமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். அதன் பின் ரஜினியின் 173வது படத்திலிருந்து சுந்தர்.சி விலகியபோது ரஜினி பலரிடமும் கதை கேட்டார். அதில் ராம்குமார் பாலகிருஷ்ணனும் ஒருவர். ராம்குமார் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும் அப்படத்தை தயாரிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த கதையில் ஆர்வம் காட்டவில்லை. தற்போது சிபி சக்கரவர்த்தியை உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள்.

பார்க்கிங் படத்திற்கு பின் ராம்குமார் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அந்த படத்தில் சந்தானமும் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் சிம்பு நடிக்கவில்லை. தற்போது சிம்பு மற்றும் ரஜினி இருவருமே தன்னுடைய படத்தில் நடிக்க மாட்டார்கள் என்பது உறுதியாகிவிட்டதால் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஈடுபட்டிருக்கிறாராம்.
சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்த சிபி சக்ரவர்த்தி ரஜினி படத்தை இயக்கப் போய்விட்டார். ரஜினி படத்தை இயக்குவதாக பெயர் அடிபட்ட ராம்குமார் பாலகிருஷ்ணன் சிவகார்த்திகேயனை வைத்து படமெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
