rajini
தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர்.சி விலகிய நிலையில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனை டிக் அடித்திருக்கிறார் ரஜினி. இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ரஜினி இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். கோவா உள்ளிட்ட பல இடங்களிலும் தற்போது ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் ராம்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் எனத்தெரிகிறது. எப்படியும் 2026 மார்ச் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கும் என்கிறார்கள். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினியின் பிறந்த நாளான வருகிற 12ம் தேதி வெளியாகும் எனத்தெரிகிறது.
ஒருபக்கம், இந்த படத்தின் கதை விவாதம் நடைபெற்று வருகிறது. ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது உதவியாளர்களுடன் இப்படத்தின் கதையை பற்றி விவாதம் செய்து வருகிறார். ஏற்கனவே அவர் சிம்புவை வைத்து இயக்கவிருந்த கதையை ரஜினிக்கு ஏற்றார் போல மாற்றியிருக்கிறார் எனவும், ஒரு கல்லூரியின் பின்னணியில் கதை நடப்பது போல திரைக்கதை இருக்கும் எனவும் சொல்கிறார்கள்.
இந்நிலையில், இந்த படத்தில் சில காட்சிகளில் ரஜினியை மீசை இல்லாமல் காட்டினால் என்ன என்கிற எண்ணம் ராம்குமாருக்கு வந்திருக்கிறதாம். ரஜினி தில்லு முல்லு, பாபா போன்ற படங்களில் மீசை இல்லாமல் நடித்திருந்தார். தில்லு முல்லு காமெடி படம் என்பதால் அது அவருக்கு செட் ஆனது. ஆனால், இப்போது ரஜினிக்கு செட் ஆகுமா என்பது தெரியவில்லை. எப்படி இருந்தாலும் ரஜினி படம் முழுக்க அப்படி வரமாட்டார் என சொல்கிறார்கள். ஒருவேளை ரசிகர்களின் எதிர்ப்பால் இந்த எண்ணத்தை ராம்குமார் கைவிடம் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…
கோலிவுட்டில் உள்ள…