பல வருடங்களாக திரையுலகில் இருந்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

அதோடு மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான பல விருதுகளை பெற்றுள்ளார். 80,90 களில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் தற்போது அம்மா நடிகையாக மாறிவிட்டார்.

பாகுபலி திரைப்படத்தில் ராஜாமாதா வேடத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: வீடு வாங்கி கொடுத்து நன்றியை தெரிவித்த ரஜினி!..யார் அந்த பிரபலம் எதற்காக தெரியுமா?..

அதோடு, இளம் நடிகைகளை போல கட்டழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

