அமீருக்கு ஆட தெரியலையா...? ரம்யா கிருஷ்ணனையே மிரளவைத்த தாமரை -வீடியோ!
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போட்டியாளர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற மற்றொரு டான்ஸ் ஷோவை நடத்தி வருகிறது விஜய் டிவி. இதில் ரம்யா கிருஷ்ணன், நகுல் நடுவராக இருந்து வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியும் ரசிகர்களின் ஆதரவுடன் சிறப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி ரவுண்டை நெருங்குகிறது. சமீபத்தில் வெளியான ப்ரோமோ ஒன்றில், இதில் எந்த ஜோடிக்கு இறுதி போட்டியில் முன்னேறுவதற்கு தகுதி இருக்கிறது. யாருக்கு இல்லை? என்பது குறித்து ஓட்டு எடுக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: தமிழ்சினிமாவில் அதிரடிக் காட்சிகளை அமைத்து வெற்றிப்படமாக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ஸ்டண்ட் மாஸ்டர்!
அதில் சக போட்டியாளரான தாமரை அதிரடியாக அமீருக்கு தகுதி இல்லை என கூற அரங்கமே அதிர்ந்துவிட்டது. ஒரு நடன இயக்குனருக்கே தகுதி இல்லையா? என ரம்யாகிருஷ்ணன் தாமரை பேச்சை கேட்டு மிரண்டுபோனார். ஆடியன்ஸ் எல்லோரும் அமீர் - பவனி ஜோடி தான் டைட்டில் வின்னர் என கூறிக்கொண்டிருக்கும் போது தாமரையின் இந்த பேச்சு அவருடைய தகுதியையே இழக்கசெய்துள்ளது. இதோ அந்த வீடியோ.... https://www.youtube.com/watch?v=oRF816CKYtU&t=16s
COPYRIGHT 2024
Powered By Blinkcms