காலம்போன காலத்துல காவாலா கேட்குதா!.. தமன்னா ஸ்டெப்பை போட்ட ரம்யா கிருஷ்ணன்.. வீடியோ பாருங்க!...

ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவில்லை என்றும் ரம்யா கிருஷ்ணன் தான் நடித்துள்ளார் என்கிற தகவல்கள் ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பேசுவதில் இருந்தே தெரிகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தனது காணாமல் போன மகனை தேடுவதும், பேரனுடன் நடந்து செல்லும் ஒரு பாடல் காட்சியும் இடம்பெற்ற நிலையில், இந்த படம் அப்படியே கமல் நடித்து கடந்த ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த விக்ரம் படத்தின் காப்பி தான் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் தமன்னாவை விட கவர்ச்சி உடையில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காவாலா பாட்டுக்கு நடனம் ஆடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

குத்தாட்ட பாடல்களுக்கு கிளாமர் டான்ஸ்:

நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு சிறந்த டான்ஸர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த காலத்தில் இருந்து ஏகப்பட்ட குத்தாட்ட பாடல்களுக்கு நடனமாடி உள்ளார். சிம்புவுடன் ரம்யா கிருஷ்ணன் ஆடிய “போட்டுத் தாக்கு” பாடலை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

விஜயகாந்தின் நரசிம்மா படத்தில் வரும் “லா.. லா.. நந்தலாலா” பாடலில் அப்படியொரு கவர்ச்சி நடனத்தை ஆடியிருப்பார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் “மின்சாரப்பூவே” பாடலுக்கு பரதநாட்டியமும் தனியாக கட்டிப்புடி கட்டிப்புடிடா ஸ்டைலில் கட்டிலில் கவர்ச்சி ஆட்டமும் போட்டிருப்பார்.

ரஜினிக்கு ஜோடி:

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் தான் நடித்துள்ளார் என்றும் தமன்னா ஒரே ஒரு பாட்டுக்கும் சில காட்சிகளுக்கும் மட்டுமே வந்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வயதான காலத்தில் ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் கஷ்டம் என ரஜினிகாந்தே மேடையில் சொல்லி விட்டார். மேலும், ரஜினியும் ரம்யா கிருஷ்ணனும் சேர்ந்து வில்லத்தனத்தில் படையப்பா படத்தில் மிரட்டிய நிலையில், இந்த படத்தில் காமெடியில் கலக்க காத்திருக்கின்றனர்.

காவாலா பாட்டுக்கு ரம்யா கிருஷ்ணன் டான்ஸ்:

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக செம மாடர்னாக டிரெஸ் பண்ணிவிட்டு கிளம்பிய ரம்யா கிருஷ்ணன் தனது டீமுடன் காவாலா பாட்டுக்கு போட்ட நடன வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ரம்யா கிருஷ்ணன் இந்த காலம் போன காலத்திலும் காவாலா பாட்டுக்கு என்னம்மா டான்ஸ் ஆடுறாரு என்றும் தமன்னா எல்லாம் தள்ளிப் போ என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்..

https://www.instagram.com/reel/CvSDrDqrBEM/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

 

Related Articles

Next Story