Cinema History
52 வயதிலும் ஐட்டம் டான்ஸ் ஆடும் ரம்யா கிருஷ்ணன்!.. இந்த அளவுக்க இறங்கி வேலை பார்ப்பாரு..??
ரம்யா கிருஷ்ணன் கடந்து வந்த பாதை :
நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக இவருடைய கதாபாத்திரங்கள் அனைத்தும் இன்றளவிலும் மக்களிடையே பிரபலம் வாய்ந்த கதாபாத்திரங்களில் ஏற்றி நடித்திருக்கிறார். குறிப்பாக படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரமும் மற்றும் 2013 ஆம் ஆண்டு பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா கதாபாத்திரமும் இன்றளவிலும் மக்களிடையே ரம்யா கிருஷ்ணன் அவர்களை நினைவு கூறுகிறது.
இந்த நிலையில் பல கிசுகிசு தகவல்களை வெளியிடும் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் நடிகை ரம்யா கிருஷ்ணன் பற்றிய நிறைய கிசுகிசுக்களை இணையத்தில் வெளிவிட்டு இருக்கிறார் அந்த வகையில் அவர் வெளியிட்ட செய்திகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
நடிகை ரம்யா கிருஷ்ணன் முதல் முதலாக தமிழ் சினிமாவில் வெள்ளை மனசு எனும் திரைப்படத்தில் நடிகர் ஒய் ஜி மகேந்திரன் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இவன் நடித்த முதல் திரைப்படமே மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதனை அடுத்து தமிழ் சினிமாவில் இருந்து சற்று விலகி தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடனங்களில் அவ்வப்போது வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் தெலுங்கு சினிமாவில் எப்போது இவருக்கு நல்ல மவுசு கிடைத்தது என்றால் அம்மன் கதாபாத்திரத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து தெலுங்கு சினிமாவில் நிறைய திரைப்படங்களில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வர ஆரம்பித்தன.
இதையும் படிங்க- செல்லாக்காசுதான்! வீட்டுக்குள்ள பிரச்சினையை முதல்ல முடி.. அப்புறம் வா – விஜயை நார் நாராக கிழிக்கும் பத்திரிக்கையாளர்
மேலும் தெலுங்கு சினிமாவில் மட்டுமே நடித்து வந்த நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு தமிழில் கேப்டன் பிரபாகரன் எனும் திரைப்படத்தில் ஒரு குத்தாட்ட பாடலில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது இந்த படத்தில் நடிகர் கேப்டன் விஜயகாந்த் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்த அந்த படத்தில் இவர் கவர்ச்சியாக நடனமாட வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பாட்டு அன்றைய இளைஞர்களுக்கு ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்தும் விதமாக பட்டி தொட்டி எங்கும் பாட்டு ஹிட் ஆனது.
இதனை அடுத்து படையப்பா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்ய நிறைய நடிகர்களை பரிசோதனை செய்திருக்கிறார்கள் ஆனால் யாருக்குமே இந்த கதாபாத்திரம் செட்டாகவில்லை கடைசியாக இவருக்கு தான் இந்த கதாபாத்திரம் காண கச்சிதமாக பொருந்தியது.
ரம்யா கிருஷ்ணன் இவருடைய சொந்தக்காரரா??
இதுவரையில் யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை ஒன்று உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரான சோ அவர்களின் அக்கா மகள் தான் ரம்யா கிருஷ்ணன் என்பது இதுவரையில் யாருக்கும் தெரியாத ஒரு விஷயமாகவும். திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் அவர்கள் நடிப்பதை ஷோ அவர்கள் விரும்ப மாட்டார். பிறகு நாளடைவில் ரம்யா கிருஷ்ணன் அவர்கள் மிகப்பெரிய நடிகையாக உருவானபோது சோ அவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணன் அவர்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறின் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது தனக்கு கொடுக்கப்பட்டிருந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மறைந்த ஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தை அப்படியே ரசிகர்களின் கண்முன்னே கொண்டு வந்து காண்பித்தார் அந்த அளவிற்கு அவருடைய நடிப்பு பிரமாதமாக இருந்தது.
அவருடன் நடிப்பவர் மூத்த நடிகர் ஆனாலும் சரி புதிய நடிகர் ஆனாலும் சரி அனைவரையும் ஒரே தரத்தில் வைத்து தான் அவர் நடிப்பார் அந்த அளவிற்கு நடிப்பில் கெட்டிக்காரர் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்களைப் பற்றி நிறைய கிசுகிசு தகவல்களும் வெளியாகி என பிரபல பத்திரிகை ஒன்றில் அவரைப் பற்றி நீங்களும் உங்கள் கணவர் இருவரும் வேறு வேறு இடத்தில் இருக்கிறீர்கள் என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார்கள் அதற்கு அவர் சிரித்துக் கொண்டே நான் என்னுடைய பணிக்காக வேறு இடங்களுக்குச் சென்று வேலை செய்து வருகிறேன் அவர் அவருடைய பணிக்காக அங்கேயிருந்து வேலை செய்கிறார் இதில் என்ன பிரச்சனை உங்களுக்கு அப்படின்னு கூலா சொன்னாரு அந்த கிசுகிசு செய்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
சினிமாவில் உட்ச்சதை தொட்ட ரம்யா கிருஷ்ணன் :
இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணன் அவர்களுக்கு 2013 ஆம் ஆண்டு பாகுபலி திரைப்படத்தில் ராஜ மாதா கதாபாத்திரத்தில் ஏற்று நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த கதாபாத்திரமே ரம்யா கிருஷ்ணன் அவர்களை உலக சினிமா வரலாற்றில் அறிமுகம் செய்யும் அளவிற்கு இவரது நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது என்றே சொல்லலாம் குறிப்பாக அதில் ஒரு வசனம் வரும் அந்த வசனம் இதுவே என் கட்டளை என் கட்டளையே சாசனம் எனும் வசனம் திரையரங்கே அதிர வைத்த ஒரு வசனம் என்று கூறலாம் அந்த அளவிற்கு இவருடைய குரல் வளம் மிகத் தெளிவாக இருந்தது என்றே கூறலாம். இந்த கதாபாத்திரத்தில் இவரை தவிர வேறு எவராலும் இப்படி நடிக்க முடியாது என்ற சொல்லும் அளவிற்கு சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் தற்சமயம் பார்ட்டி எனும் திரைப்படத்தில் 52 வயதிலும் இளமை தழும்பு தழும்பு கவர்ச்சியில் களம் கண்டுள்ளார் அம்மணி. இவருக்கு வயது ஏறவே ஏறாதா அப்படின்னு கேட்கிற அளவிற்கு இளமை தோற்றத்துடன் இன்றும் நிறைய திரைப்படத்தில் நடித்து வருகிறார். குறிப்பாக ஒரே நடிகருக்கு தங்கையாகவும் மனைவியாகவும் மகளாகவும் நடித்த ஒரே நடிகை இவர்தான்.
அவை, படையப்பா திரைப்படத்தில் நடிகர் நாசருக்கு தங்கையாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், பிறகு பாகுபலி திரைப்படத்தில் நாசருக்கு மனைவியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், பிறகு வந்தா ராஜாவா தான் வருவேன் எனும் திரைப்படத்தில் நாசருக்கு மகளாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இப்படி ஒரே நடிகருடன் நிறைய கதாபாத்திரங்களை நடித்த ஒரே நடிகை என்ற பெயரையும் ரம்யா கிருஷ்ணன் அவர்கள் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றே சொல்லலாம் எந்தவித கதாபாத்திரத்திலும் தயங்காமல் நடிக்கும் குணமுடைய ரம்யா கிருஷ்ணனை போல தற்சமயம் எந்த ஒரு நடிகையும் நடிக்க முடியாது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க- செல்லாக்காசுதான்! வீட்டுக்குள்ள பிரச்சினையை முதல்ல முடி.. அப்புறம் வா – விஜயை நார் நாராக கிழிக்கும் பத்திரிக்கையாளர்