இப்பவும் நீ செம ஹாட்டு ராஜாமாதா!...டாப் கிளாஸ் கவர்ச்சியில் ரம்யா கிருஷ்ணன்....
தமிழ் சினிமாவில் 35 வருடங்களுக்கும் மேல் நடித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். துவக்கத்தில் சிறிய வேடங்களில் நடிக்க துவங்கி பின் கதாநாயகியாக மாறினார்.தெலுங்கில் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழில் ரஜினி நடித்த படையப்பா படத்தில் அவர் ஏற்ற நீலாம்பரி வேடம் ரசிகர்களிடம் அவரை பிரபலப்படுத்தியது. அப்படம் அவரின் மார்க்கெட்டை உயர்த்தியது. ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தில் அவர் ஏற்ற ராஜாமாதா வேடம் இந்திய அளவில் அவரை பிரபலப்படுத்தியது.
ஒருபக்கம் திரைப்படங்களில் நடிப்பது, ஒருபக்கம் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருப்பது என பிஸியாக இருக்கிறார். மேலும், அவ்வபோது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், திடீரென சற்று கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.