நல்ல நடிகையை இழந்திருப்போம்...! ரம்யாகிருஷ்னன் நடிகையாவதை தடுத்த பழம்பெரும் நடிகர்...!
1983 ஆம் ஆண்டு ஒய்ஜி.மகேந்திரன் இயக்கி நடித்த படம் தான் வெள்ளைமனசு. இப்படத்தில் முதன்முதலில் அறிமுகமான நடிகை தான் ரம்யா கிருஷ்ணன். ஆனால் இப்படம் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு மகேந்திரன் படம் இயக்குவதை விட்டுவிட்டு நாடகம் இயக்க தொடங்கினார்.
ரம்யாகிருஷ்ணனும் தெலுங்கு சினிமா உலகில் நுழைந்தார். அங்கு அவருக்கு ஒரு சில பாடல்களில் கவர்ச்சி நடனம் ஆட வாய்ப்பு வந்தது. அதையும் ஒதுக்காமல் ஒத்துகொண்டு ஆடினார். பின்னர் தெலுங்கில் அம்மன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை ஏறு நடித்து ஒரு அம்மனாகவே காட்சி அளித்து எல்லார் மனதையும் ஆட்கொண்டார்.
மேலும் உங்களுக்காக : மேல கொஞ்சம்…கீழே கொஞ்சம்….பிகினி உடையில் கவர்ச்சி விருந்து வைத்த ராய் லட்சுமி…
அதன்பின் அவர் மார்க்கெட் உயர்ந்தது. படையப்பா படத்திற்காக வில்லி கேரக்டருக்கு நீண்ட நாள் ஆலோசனைக்கு பிறகு ரஜினியும் ரவிக்குமாரும் சேர்ந்து தேர்ந்தெடுத்த நடிகை தான் இவர்.
இப்படத்திற்கு பிறகு இவரின் மவுசு அதிகமாகி விட்டது. இவர் நடிகர் சோ.ராமசாமியின் அக்காள் மகள் என்பதால் சுத்த ஐயங்கார் பொண்ணான இவர் நடிக்கவே கூடாது என ராமசாமி கூறினாராம். ஆனால் இவரின் வளர்ச்சியை கண்ட ராமசாமி அதை ஒப்புக்கொண்டாராம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.