4 கோடி சம்பளமா? நயன்தாராவை கழட்டி விட்டு ராஜமாதாவை புக் செய்த படக்குழுவினர்....

அரசியலுக்கு செல்வதால் சினிமாவிற்கு டாடா காட்டி விட்டு சென்ற சிரஞ்சீவி மீண்டும் அரசியலுக்கு குட் பை சொல்லிவிட்டு சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். அவர் நடித்த முதல் படமே தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் தான். அதனை தொடர்ந்து சிரஞ்சீவி ரீமேக் படங்களில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
தற்போது சைரா நரசிம்ம ரெட்டி, ஆச்சார்யா உள்ளிட்ட படங்களை தவிர வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலோ சங்கர், லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட்பாதர் உள்ளிட்ட இரண்டு ரீமேக் படங்களில் நடித்து வருகிறார். இதில் காட்பாதர் படத்தை பிரபல தமிழ் இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் தான் காட்பாதர். இதில் மோகன்லால் கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்க மஞ்சுவாரியர் கேரக்டரில் நயன்தாரா நடிப்பார் என கூறப்பட்டது. நயன்தாரா கேரக்டர் படத்தில் சிறிது நேரம் மட்டுமே வந்து போகுமாம். அதற்கு நயன்தாரா சுமார் 4 கோடி வரை சம்பளம் கேட்டதாக தெரிகிறது.
மேலும் படத்தில் வில்லனின் மனைவி கேரக்டரில் தான் நயன்தாரா நடிக்க உள்ளார். அதுமட்டுமின்றி டீன் ஏஜ் வயது பெண்ணுக்கு தாயாகவும் நயன்தாரா கேரக்டர் இருக்குமாம். சம்பளம் மற்றும் வயதுக்கு வந்த பெண்ணிற்கு தாயாக நடிப்பது போன்ற காரணங்களால் நயன்தாரா இந்த படத்தில் நடிக்கவில்லையாம்.

ramya krishnan
அதனால் தற்போது நயன்தாரா கேரக்டரில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். ஏற்கனவே பல படங்களில் ரம்யா கிருஷ்ணன் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மட்டும் இதுபோன்ற சிறிய காரணங்கள் காரணமாக நயன்தாரா பல படங்களின் வாய்ப்புகளை தட்டி கழித்துள்ளார்.