More
Categories: Entertainment News

வயசானாலும் அது மட்டும் குறையல!…ரம்யா கிருஷ்ணனின் நச் கிளிக்ஸ்…

தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் 35 வருடங்களுக்கும் மேல் நடித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கி பின் கதாநாயகியாக மாறினார். தெலுங்கில் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Advertising
Advertising

தமிழில் ரஜினி நடித்த படையப்பா படத்தில் அவர் ஏற்ற நீலாம்பரி வேடம் ரசிகர்களிடம் அவரை பிரபலப்படுத்தியது. அப்படம் அவரின் மார்க்கெட்டை உயர்த்தியது. ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தில் அவர் ஏற்ற ராஜாமாதா வேடம் இந்திய அளவில் அவரை பிரபலப்படுத்தியது.

ஒருபக்கம் திரைப்படங்களில் நடிப்பது, ஒருபக்கம் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருப்பது என பிஸியாக இருந்து வருகிறார். அதோடு, அவ்வபோது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘வயசானாலும் அது மட்டும் குறையல’ என பதிவிட்டு வருகின்றனர்.

Published by
சிவா

Recent Posts