பாரதிராஜாவை அலட்சியபடுத்திய ரம்யாகிருஷ்ணன்....பொறுமையை விட்டதால் ஏற்பட்ட இழப்பு....!
சென்னையை பூர்வீகமாக கொண்டவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் நடித்த ஆரம்ப கால படங்கள் இவருக்கு கைகொடுக்கவில்லை. தமிழை பூர்வீகமாக கொண்டாலும் மலையாள படத்தில் தான் முதலில் நடித்தார். ஆனால் இந்த படம் வெளியாக வில்லை. மீண்டும் தமிழில் ஒய்ஜி மகேந்திரனுடன் ’வெள்ளை மனசு’ என்ற படத்தில் அறிமுகமானார்.
ஆனால் இந்த படங்களுக்கு முன்னாடியே ரம்யா கிருஷ்ணன் முதலில் படவாய்ப்புக்காக அணுகியது இயக்குனர் பாரதிராஜாவை தானாம். அவர் அந்த சமயம் ஒரு கைதியின் டைரி படப்பிடிப்பில் இருந்தாராம். அந்த ஸ்டுடியோவிற்கு ரம்யா கிருஷ்ணன் சென்றுள்ளார். இவரை பார்த்ததும் பாரதி ராஜாவிற்கு மிகவும் பிடித்துப் போய் விட்டதாம். பார்த்தவுடனே ரம்யா ஒரு காலத்தில் டாப் நடிகையாக வலம் வருவார் என்று சொன்னாராம்.
கைதியின் டைரிக்கு பிறகு, முதல் மரியாதை மற்றும் சில படங்களில் பிஸியாக இருந்த பாரதி ராஜா ரம்யாவை ஒரு 8 மாதங்கள் காத்திருக்குமாறு கூறினாராம். ஆனால் ரம்யா என்ன நினைத்தாரோ பொறுமையை இழந்து மலையாள பக்கம் சென்று திரும்பவும் தமிழுக்கு வெள்ளைமனசு படத்தில் அறிமுகமாயிருக்கிறார். ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கி நடித்த படமாதலால் அவரால் அடுத்த நிலைக்கு போக முடியவில்லையாம்.
அந்த காலங்களில் பாரதிராஜா அவரின் அடுத்த படத்திற்கு என்னை கமிட் செய்துள்ளார் என்று சொன்னாலே நிறைய தயாரிப்பாளர்கள் வீட்டின் முன் வந்து வரிசையில் நிற்பார்கள் அப்படி வந்தவர்கள் ராதா, அம்பிகா, ரேகா இவர்கள் எல்லாரும். ஆனால் ரம்யா கிருஷ்ணனுக்கு அது தெரியாமல் போனது தான் ஆரம்பகால படங்களின் தோல்வி. ஆனால் அடுத்தடுத்து அவரின் விடா முயற்சியால் இன்று ஒரு நிலையான இடத்தை பிடித்து விட்டார் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.