சேர்த்துவச்ச மொத்த புகழும் காலி ஆகிடுமோ? - அந்த ரோலில் நடிக்க பயந்த ரம்யா கிருஷ்ணன்!

தமிழ் சினிமாவில் வில்லி, ஹீரோயின், குணசித்திர வேடம், சிறப்பு தோற்றம், கேமியா ரோல் என எது கிடைத்தாலும் அதில் தன் பங்கை சிறப்பாக செய்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திழுப்பார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
1983 வெள்ளை மனசு என்ற படம் தான் இவர் நடித்த முதல் படம். படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி வேடத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் பாகுபலி திரைப்படத்தில் நடித்து உலகம் முழுக்க பேமஸ் ஆனார். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் குறித்து பிரபல பத்திரிகையாளர் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதாவது, நடிகை ரம்யா கிருஷ்ணன் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஆபாச நடிகையாக விபச்சார பெண்ணாக நடித்திருந்தார். இந்த ரோலில் முதலில் நடிக்க பயந்த அவர் இயக்குனரை அழைத்து இந்த படத்தில் நடித்தால் என் பெயர் கெட்டுவிடுமோ? என்னை தவறாக காட்டிடமாட்டீங்கல? அப்படி நடந்தால் நான் நீலாம்பரியில் சேர்த்து வச்ச மொத்த செல்வமும் காலி ஆகிடும் என பயந்தாராம். அதன் பின்னர் படத்தின் மொத்த கதையும் கூறி ரம்யா கிருஷ்ணனின் பயத்தை தெளிய வைத்து நடிக்க வைத்தாராம் இயக்குனர்.