புல்லட் ஓட்டிய நடிகை தற்போது மாட்டுவண்டி ஓட்டுகிறார்!!

by adminram |
ramya-nambisen
X

சினிமாவில் வெற்றிபெற வேண்டுமென்றால் வெறுமே வந்தோமா நடித்த்தோமா என்று இருந்தால் மட்டும் போதாது. பல கலைகளை கற்று வைத்திருந்தால் நீண்ட நாள் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை நன்கு அறிந்துகொண்டுள்ளார் நடிகை ராமயா நம்பீசன்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து பின்னர் ஸ்ரீ காந்த், சோனியா அகர்வால் நடித்த ஒரு நாள் ஒரு கனவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் நடிகை ராமயா நம்பீசன். இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ராமன் தேடிய சீதை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

2011ல் விஷ்ணு விஷாலுடன் இவர் நடித்திருந்த குள்ளநரி கூட்டம் தான் இவரை நன்கு அடையாளம் காட்டியது. அதன்பின் பீட்சா, டமால் டுமீல், சேதுபதி, மெர்குரி, சீதக்காதி என பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இது தவிர தெலுங்கிலும் இவர் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

ramya-nambesan-01
ramya nambesan

இவர் சினிமாவுக்காக பல கலைகளை கற்றுள்ளார். ஒரு படத்தில் புல்லட் ஓட்டவேண்டும் என்றதற்காக ஒரே இரவில் புல்லட் ஓட்ட கற்றுக்கொண்டார். தற்போது வெற்றி துரைசாமி என்பவர் இயக்கும் 'என்றாவது ஒரு நாள்' படத்தில் மாட்டு வண்டி ஓட்டி அசத்தியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், இப்படத்தில் கிராமத்தில், குடும்பக் கஷ்டத்தால் மாட்டு வண்டி ஓட்டிப் பிழைக்கும் பெண்ணாக நடித்து வருகிறேன். மாடுகளை கையாளுவதில் முதல் நாள் எனக்கு மிகுந்த சிக்கல் இருந்தது. அதன்பின் அந்த மாடுகளே பழகிவிட்டன என்றார்.

இப்படம் விவசாயம், குழந்தைத் தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறித்து பேசுகிறது. அதுமட்டுமல்ல, இப்படம் வெளிநாடுகளில் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளையும் வென்றிருக்கிறது.

Next Story