ஓரக்கண்ணால ஆள கவுத்துப்புட்டியே! கிக் ஏத்தும் ரம்யாபாண்டியன்!
முதன் முதலில் ஜோக்கா் படத்தின் மூலம் ரம்யா பாண்டியன் அனைவருக்கும் தெரியும் முகமாக தனது பயணத்தை தொடங்கினார். பின் மொட்டை மாடியில் இடுப்பு காட்டி போஸ் கொடுத்த போட்டோவை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களிடம் புகழ்பெற்றார். விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா டைட்டில் வெல்லவில்லை என்றாலும், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார். சிங்கப் பெண் என்ற பட்டத்தோடு பிக்பாஸ் ஷோவை விட்டு வெளியே வந்த ரம்யா, தனக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், அது நடக்கவில்லை. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவான இராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
விஜய் டிவியின் வெரி பேவரைட் நிகழ்ச்சிசயான குக்வித் கோமாளியில் கலந்து கொண்டார். தற்போது நடைபெற்ற பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டாா்.
சினிமாவில் பல வாய்ப்புகள பெறுவதற்காக அழகான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தனது ஓரக்கண் பார்வையால் ஆளே தன் வசம் இழுக்கும் படி போஸ் கொடுத்து முகத்துக்கு முன்னாடி மூடியை எடுத்து போட்டு உள்ள புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.