இடுப்பை காட்டியது வீண் போகல... சூப்பர் ஸ்டார் பட வாய்ப்பை தட்டி தூக்கிய பிக்பாஸ் நடிகை......
கோலிவுட்டில் இளம் நடிகையாக வளர்ந்து வரும் ரம்யா பாண்டியன் என்னதான் ஜோக்கர் படத்தில் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றதன் மூலம் மேலும் பிரபலமாகி விட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேவந்த ரம்யா பாண்டியன் நடிப்பில் சமீபத்தில் ராமேன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படம் ஓடிடியில் வெளியானது. நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. இப்படத்தில் ரம்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் ரம்யா பாண்டியன் புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அதுவும் சாதாரண படம் அல்ல மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா பாண்டியன் ஒப்பந்தமாகியுள்ளார். மொட்டை மாடியில் வளைத்து வளைத்து போட்டோ ஷூட் நடத்தியது வீண்போகவில்லை.
மலையாளத்தில் தற்போது வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் தான் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. முன்னதாக இவர் இயக்கத்தில் வெளியான ஆமென், அங்கமாலி டைரிஸ், இ.ம.யூ, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட படங்கள் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக ஜல்லிக்கட்டு படம் இந்தியா சார்பில் 93ஆவது ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது.
தற்போது லிஜோ, தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற புதிய படத்தை இயக்குகிறார். மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமே இப்படத்தை தயாரிக்கிறது. முன்னதாக வேளாங்கன்னியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பழனியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் தான் ரம்யா பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதை அவரே அவரது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் மம்முட்டி, இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.