Categories: latest news

Ramyapandian: கங்கை நதியோரம் டும் டும் டும்..! காதலரை கரம்பிடித்த ரம்யா பாண்டியன்… ஜோடி பொருத்தம் சூப்பர்!…

நடிகை ரம்யா பாண்டியன் ரிஷிகேஷ் சிவபுரி கங்கை கரையில் இன்று தனது காதலரை கரம் பிடித்திருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து பிரபலமானதை காட்டிலும் மொட்டை மாடி போட்டோசூட் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர்தான் ரம்யா பாண்டியன். 2015 ஆம் ஆண்டு வெளிவந்த டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து ஜோக்கர் என்கின்ற திரைப்படத்தில் நடித்த பலரின் கவனத்தை ஈர்த்தார்.

இதையும் படிங்க: Idly Kadai: பக்கா பிளானிங்.. ‘இட்லி கடை’ படத்தின் ரிலீஸ் செய்தியை வெளியிட்ட தனுஷ்

சமுத்திர கனியுடன் ஆண் தேவதை என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். இந்த மூன்று திரைப்படங்களுமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்த இவருக்கு சரியாக பட வாய்ப்புகள் அமையவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு நண்பகல் நேரத்து மயக்கம் என்கின்ற படத்தில் மம்முட்டியுடன் சேர்ந்து நடிகை ரம்யா பாண்டியன் நடித்தார்.

அதன் பிறகு பெரிய அளவு எந்த திரைப்படத்திலும் கமிட்டாகவில்லை. தற்போது இடும்பன் காரி என்கின்ற திரைப்படத்திலும் முகிலன் என்கின்ற வெப் தொடரிலும் நடித்து வருகின்றார். சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமாக பேசப்பட்டார். அதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்களிடையே கவனத்தைப் பெற்றார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ரம்யா பாண்டியன் அவ்வபோது போட்டோசூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இவருக்கு யோகா மீது அதிக ஆர்வம் இருந்திருக்கின்றது. கொரோனா காலகட்டத்தில் யோகா கற்றுக்கொள்ள ஒரு ஆன்லைன் பயிற்சி மையத்தில் இணைந்திருக்கின்றார். அப்போது யோகா பயிற்சியாளர் லோவல் தவானுக்கும் ரம்யா பாண்டியனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கின்றது.

பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்தார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது காதலரை அறிமுகம் செய்த ரம்யா பாண்டியன் அவருடன் சிவஸ்தலங்களுக்கு செல்லும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் இன்று ரம்யா பாண்டியனுக்கும் அவரது காதலரான லோபல் தவானுக்கும் ரிஷிகேசன் உள்ள சிவபுரியில் கங்கை நதி பாயும் கரையில் திருமணம் நடைபெற்றது .

இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தார்கள். ரம்யா பாண்டியனின் நெருங்கிய உறவினரான நடிகர் அருண்பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்கள். நடிகை ரம்யா பாண்டியன் சிவப்பு நிற பட்டுப்புடவையிலும், லோபல் தவான் வெள்ளை நிறப் பட்டு வேஷ்டியில் ஆற்றங்கரையில் அருகே சிறிய மேடை அமைக்கப்பட்டு தமிழ் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இதையும் படிங்க: போட்ட முதலயே எடுக்க திணறும் பெக்கர் பிரதர்!… சத்தமே இல்லாமல் சம்பவம் செய்யும் லக்கி பாஸ்கர்!..

இந்த திருமண நிகழ்ச்சியில் அசோக் பாண்டியன், அவரது மனைவி கீர்த்தி பாண்டியன், மேலும் ரம்யா பாண்டியனின் சகோதரிகள், அருண்பாண்டியன் என அனைவரும் கலந்து கொண்டனர். விரைவில் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. தற்போது ரம்யா பாண்டியனின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ramya suresh

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

7 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

7 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

8 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

15 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

16 hours ago