Categories: Entertainment News

உன்ன பாத்துக்கிட்டே இருக்கலாம்!…புடவையில் வேற லெவல் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்…

ஜோக்கர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். ஆனால், மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து ஓவர் நைட்டில் பிரபலமானவர் இவர். அந்த புகைப்படங்கள் பேஸ்புக், டிவிட்டர் என அனைத்திலும் வைரலாக பரவி அவருக்கென ரசிகர் கூட்டமே உருவானது. ஆனால், அந்த ரசிகர்களை அவரால் தக்கவைக்க முடியவில்லை.

சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருந்த அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் வாய்ப்புகள் கிடைத்தது. கூடவே, பிக்பாஸ் வாய்ப்பும் வர அதை பயன்படுத்திக்கொண்டு உள்ளே சென்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகாவது தனக்கு வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான் அவருக்காக காத்திருந்தது. விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நடிகர் சூர்யா தயாரித்த ‘ராமே ஆண்டாலும் ராமனே ஆண்டாலும்’ படத்தில் நடித்திருந்தார். ஒருபக்கம், விதவிதமான உடையில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் புடவை கட்டி ஒரு விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

Published by
சிவா