More
Categories: latest news tamil movie reviews

அனிமல் விமர்சனம்: ரன்பீர் கபூரின் அசுரத்தனமான நடிப்பு!.. அதை மட்டும் சரி செஞ்சிருக்கலாம் சந்தீப் ரெட்டி!

டோலிவுட் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டேவை வைத்து இயக்கிய அர்ஜுன் ரெட்டி திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பின்னர் அந்த படத்தையே இந்தியில் கபிர் சிங் என எடுத்து 400 கோடி வசூலை ஈட்டிக் கொடுத்தார்.

இந்நிலையில், மீண்டும் பாலிவுட்டில் தனது அடுத்த படமான அனிமல் படத்தை இயக்கி இன்று ரிலீஸ் செய்திருக்கிறார். இந்த படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் மற்றும் பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: முதன்முறையாக ஒரே நடிகரின் இரு படங்கள் ரிலீஸ்!. ரெண்டுமே சூப்பர் ஹிட்!.. கெத்து காட்டிய நடிகர் திலகம்…

சுமார் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடக் கூடிய படமாக உருவாகி உள்ள அனிமல் படம் ஆரம்பத்தில் ரசிக்கும் படி இருந்தாலும், போக போக படத்தின் நீளம் தியேட்டரில் ரசிகர்களை நெளிய வைப்பதை தவிர்க்க முடியவில்லை.

ஆனால், கடைசி வரை தனது அசுரத்தனமான நடிப்பால் சாக்லேட் பாயாக இருந்த தனது இமேஜை அனிமலாகவே மாற்றி உள்ளார் ரன்பீர் கபூர். ராஷ்மிகா மந்தனாவுடன் படம் முழுவதும் லிப் லாக் அடிப்பதும், மடியில் படுத்துக் கொண்டு உறங்குவதும், உள்ளாடையுடன் ஜல்ஸா பண்ணுவதுமாக அடல்ட் காட்சிக்கு பஞ்சமே வைக்காமல் சந்தீப் ரெட்டி வங்கா ரன்பீர் கபூரை குஷிப்படுத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க: இது வரைக்கும் கேமிரா பாத்து சொன்னதில்லை! வெட்கமே இல்லாம இவ்வளவு ஓப்பனா சொன்ன சரவணவிக்ரம்

அதே போல வில்லன் பாபி தியோல் உடனும் சட்டையில்லாமல் சண்டைக் காட்சிகளை வைத்து இருவரையும் கட்டி புரள வைத்து பார்ப்பவர்களையே ஒருமாதிரி நினைக்க வைத்து விடுகிறார். ஜோக்கர் படத்தின் பாதிப்பு ரன்பீர் கபூரின் நடிப்பிலும் சந்தீப் ரெட்டி வங்காவின் இயக்கத்திலும் தெளிவாக தென்படுகிறது.

முதல் பாதியும் இடைவேளை காட்சியும் தியேட்டரே தெறிக்கவிடும் நிலையில், இந்த ஆண்டு பல படங்களுக்கு ஏற்பட்ட அதே சாபக்கேடான இரண்டாம் பாதி சொதப்பல் இந்த படத்தையும் விட்டு வைக்கவில்லை. ஆனாலும், உனக்கு செம தில்லுப்பா 3 மணி நேரம் படமே போர் அடித்து விடும் 3.21 மணி நேரத்துக்கு ஒரு படத்தை ரிலீஸ் செய்து இப்படி ரசிகர்களை பழிவாங்குறியேன்னு ஃபேன்ஸ் தியேட்டரின் கிளைமேக்ஸுக்கு முன்னதாகவே கடுப்பாகி விடுகின்றனர். ஆனாலும், கிளைமேக்ஸில் மீண்டும் படம் ஜெயிக்கிறது.

அனிமல் – ஆக்ரோஷம்!

ரேட்டிங் – 3.75/5.

Published by
Saranya M

Recent Posts