இளையராஜா வேண்டாம்!.. புது படத்திற்கு அவரை புக் செய்த பா.ரஞ்சித்....
அட்டக்கத்தி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். அப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்த கானா பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்தது.
அதன்பின் ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா மற்றும் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் வரை சந்தோஷ் நாராயணின் இசை அப்படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.
சந்தோஷ் நாராயணைன் மகள் தீ இசையமைத்து வெளியாகிய ‘எஞ்சாமி’ பாடல் யுடியூப்பில் செம ஹிட் அடித்தது. இப்பாடலை அறிவு என்பவருடன் இணைந்து தீ எழுதியிருந்தார். அறிவு இப்பாடலை தீயுடன் இணைந்து பாடியதோடு அந்த பாடல் வீடியோவிலும் நடித்திருந்தார்.
ஆனால், இப்படல் தொடர்பான விளம்பரங்களில் அறிவின் பெயர் புறக்கணிக்கப்படுவதாக ரஞ்சித் பகீரங்கமாக புகார் கூறினார். மேலும், சார்பட்டா பரம்பரை படத்தில் இடம் பெற்ற சில பாடல் வரிகளை சந்தோஷ் நாராயணன் நீக்க சொன்னதாகவும் கூறப்படுகிறது. இது ரஞ்சித் – சந்தோஷ் நாராயாணன் இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, இனிமேல் ரஞ்சித் படங்களில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க வாய்ப்பில்லை என செய்திகள் வெளியானது. அதோடு, ரஞ்சித் தற்போது இயக்கி வரும் நட்சத்திரம் நகர்கிறது என்கிற படத்திற்கு இசையமைக்க இளையராஜாவிடம் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால், ராஜாவிடம் தன்னுடையை கருத்துக்களை விளக்கி அதற்கேற்றால் போல் பாடல்களை வாங்க முடியுமா என்கிற சந்தேகம் ரஞ்சித்திற்கு வந்ததாம். எனவே, அவரின் தயாரிப்பில் வெளிவந்த இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்கிற படத்திற்கு இசையமைத்த தென்மா என்பவரை இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்துவிட்டாராம் ரஞ்சித்.