Connect with us

Cinema History

அந்தக்காலத்துல இருந்து இப்போ வரை தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத அந்தக் காட்சிகள்..!

பெண்ணின் பெருமையே கற்பு தான். அதை காக்கும்பொருட்டு அவள் கற்புக்கரசியாகிறாள். தன் உயிரை விட மேலாகக் கற்பைக் காத்து வருபவர்கள் பெண்கள் தான்.

அப்படிப்பட்ட கற்புக்கே களங்கம் விளைவிக்கும் கயவர்களும் இந்த மண்ணில் உலாவி வருகின்றனர். அவர்களை மையமாகக் கொண்டு பல தமிழ்ப்படங்கள் வந்துவிட்டன. அவற்றில் ஒருசிலவற்றைப் பார்ப்போம்.

1950ல் வந்த ஓர் இரவு படம் ஆதரவற்ற ஏழைப்பெண்கள் கற்போடு நடமாட முடியாது என்ற கருத்தை மையமாகக் கொண்டு வந்துள்ளது.

1952ல் வெளியான அந்தமான் கைதி படத்தில் கற்பழிக்கப்பட்டு தற்கொலைக்கு முயலும் பெண்ணை நாயகன் மணந்து கொள்கிறான். அதே போல வந்த படம் தான் 1990ல் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நடித்த சத்ரியன்.

1955ல் வெளியான முதல்தேதி படத்தில் பெண் பக்கத்து வீட்டு இளைஞனால் கற்பழிக்கப்படுகிறாள். 1962ல் வெளியான சின்னத்துரை படத்தில் ஜமீன்தாரால் கற்பழிக்கப்படுகிறாள்.

Pollathavan Rajni

1980ல் வெளியான பொல்லாதவன் படத்தில் காதல் மனைவியை மாமன் கற்பழித்துக் கொலை செய்கிறான்.  ரஜினிகாந்த் அவனைப் பழிவாங்குகிறார்.

1970ல் வெளியான தர்மயுத்தம் படத்தில் தங்கையை கற்பழித்தவனை நாயகன் பழிவாங்குகிறான். 1989ல் புதியபாதை படத்தில் பார்த்திபன் ஒரு பெண்ணைக் கற்பழித்து விடுகிறான். படத்தில் ரவுடியாக வரும் அவனையே மணந்து நல்லவனாக்குகிறாள் நாயகி.

1982ல் மருமகனே வாழ்க படத்தில் நாயகியை நாயகன் கற்பழித்து விடுகிறான். மீண்டும் நாயகியே மன்னித்து அவனை மணந்து கொள்கிறாள்.

1976ல் வெளியான கன்னிப்பருவத்திலே படத்தில் நண்பனுக்கு விபத்தில் அடிபட்டு ஆண்மை போய்விடுகிறது. உடனே அவனது மனைவியை நண்பன் கற்பழிக்கிறான்.

1979ல் ரஜினிகாந்த் நடிப்பில் பைரவி படம் வெளியானது. எஜமானருக்கு தினமும் ஒரு பெண்களைக் கொண்டு வந்து விருந்தாக்குகிறான் நாயகன். அந்த வகையில் தன் தங்கை என்று தெரியாமலேயே அவளையும் விருந்து படைக்கிறான். கடைசியில் இது தெரியவர மன உளைச்சல் அடைகிறான். இதற்கு காரணமான எஜமானரை பழிவாங்குகிறான்.

கை கொடுக்கும் கை படத்தை இயக்குனர் பாலுமகேந்திரா உருவாக்கியுள்ளார். இதில் கண் தெரியாமல் தவிக்கும் அன்பு மனைவியை காமக்கொடூரன் கற்பழித்துவிடுகிறான். நாயகன் அவளுக்கு ஆறுதல் சொல்லி மனைவியாக ஏற்றுக்கொள்கிறான்.

சிறை படத்தில் பிராமண குலப்பெண்ணை ரௌடி கற்பழித்துவிடுகிறான். 2004ல் வெளியான வானம் வசப்படும் படத்தில் 3 நாயகர்கள் நாயகியை கடத்திச் சென்று கற்பழித்து விடுகின்றனர்.

1983ல் வெளியான ஒரு இந்தியக்கனவு படத்தில் மலைவாசிப்பெண்ணைக் கற்பழித்துவிடுகிறார் மந்திரியின் மகன். அண்ணன் ஒரு கோவில் படத்தில் நாயகனின் தங்கை கற்பழிக்கப்படுகிறாள். அதே நேரம் கற்பழித்தவனைக் கொலையும் செய்து விடுகிறாள்.

2002ல் வெளியான பாலா படத்தில் தங்கையை கற்பழித்தவனை அண்ணன்  பழிவாங்குகிறான்.

2004ல் வந்த விருமான்டி படத்தில் கமல்ஹாசன் நாயகியைக் கற்பழித்துக் கொலை செய்ததாக சித்தப்பா பசுபதி நாடகமாடுகிறான்.

Naattamai

நாட்டாமை படத்தில் நாயகன் மீது டீச்சர் தன்னைக் கற்பழித்துவிட்டதாக அபாண்டமாகப் பழியை சுமத்துகிறாள்.

2003ல் வெளியான கோவில்பட்டி வீரலட்சுமி படத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த கதாநாயகியாக வருபவர் வீரலட்சுமி. அவளுக்குப் பாடம் புகட்ட நினைத்த போலீஸ் அதிகாரி அவளைக் கற்பழிக்க நினைத்து அவளது தங்கையைக் கற்பழித்துவிடுகிறார்.

Varalaru Ajith

2006ல் வெளியான வரலாறு படத்தில் நாயகன் ஆண்மை உள்ளவரா என்ற சந்தேகம் கொண்ட மணப்பெண் மீது கோபம் கொள்கிறான் நாயகன். உடனே அவளைக் கற்பழித்துவிடுகிறான்.

பொதுவாகப் பல படங்களை நாம் ஒரு சேர பார்த்தால் ஒன்று மட்டும் புலப்படுகிறது. கற்பழிக்கப்படுபவள் பொருளாதார ரீதியாக தாழ்ந்த நிலையில் உள்ளார். அதுமட்டுமல்லாமல் அவளது சாதி, வேலை இவையும் முக்கியக் காரணமாக உள்ளது. கற்பழிக்கிறவனோ எல்லாவற்றிலும் உயர்ந்தவனாக இருப்பதாகக் காட்டப்படுகிறது.

70களுக்குப் பிறகு வந்த பெரும்பாலான படங்களில் தங்கையையேக் கற்பழிக்கிறார்கள். அண்ணன் பழிவாங்குகிறான். ஆனால் கற்பழிப்பு ஏதோ ஒரு வகையில் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது.

google news
Continue Reading

More in Cinema History

To Top