பொய் சொல்லலாம்.. ஆனா இப்படியா?.. குக்வித் கோமாளி பிரபலத்தை கடுப்பாக்கிய சிலம்பரசன்..
Silambarasan: விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கும் நடிகர் சிலம்பரசனுக்கும் ரொம்பவே நெருக்கம்தான். பிக்பாஸில் அவருடைய நண்பர்கள் தான் தொடர்ந்து கலந்து கொண்டு வருகின்றனர். அதுபோல தற்போது கூப்பிட கோமாளிகளும் அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் கலந்து கொண்டிருக்கிறார்.
தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இடம்பெற்று இருக்கிறார் விடிவி கணேஷ். மற்ற போட்டியாளர்களை விட அதிக சம்பளம் வாங்கும் கணேஷால் முதலில் தாக்குப் பிடிக்க முடியுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: பரபரப்பா போயிட்டு இருந்த கூலி ஷூட்டிங்கிற்கு சூனியம் வச்சிட்டானுங்களே.. பெரிய ஆளுதான்!
ஆனால் தன்னுடைய கலகலப்பான பேச்சாலும் சரியான சமையலாலும் தொடர்ந்து பாராட்டுகளை வாங்கி குடித்து வருகிறார். இருந்தும் அவரை அங்குள்ள ஆங்கர்களும், போட்டியாளர்களும் கலாய்க்கும் ஒரு விஷயத்தை தற்போது சிலம்பரசனை கலாய்த்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நிகழ்ச்சியில் விடிவி கணேஷ் சம்பந்தமே இல்லாமல் சில வெளிநாட்டு கதைகளை கோமாளிகளிடம் சொல்லிக் கொண்டிருப்பது ஒளிபரப்பாகும். அதைக் கேட்கும் கோமாளிகள் அவரை கலாய்த்து விட்டு தான் செல்வார்கள். கடந்த வாரம் ஒளிபரப்பான குடும்ப சுற்றல் வந்த அவரின் மகள் ஐஸ்வர்யா கூட அவர் சொல்லும் போதே இது பொய் தான் என தெரிந்துவிடும் அதனால் அதை கண்டுக்காமல் சென்று விடுவோம் என கலாய்த்திருப்பார்.
இதையும் படிங்க: அஜித் கெட்ட வார்த்தை சொல்லுவாரு.. ஆனா விஜய் அப்படி இல்ல… வெங்கட் பிரபுவின் சொன்ன சீக்ரெட்
இந்நிலையில் வானம் திரைப்படத்தில் சிம்பு மற்றும் டிடிவி கணேஷ் இணைந்து நடித்திருந்தனர். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கலகலப்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அங்கே இருக்கும் கட்டிடங்களை பார்த்து விடிவி கணேஷ் தானாக ஒரு கதையை எடுத்துவிட உளராதீங்க என சிம்பு கூறுகிறார்.
இவங்கதான் அந்த கதையை சொன்னாங்க. நான் உனக்கு ட்ரான்ஸ்லேட் பண்ணி சொல்கிறேன் என்கிறார். இதற்கு சிம்பு இத்தாலியில் இரண்டு வார்த்தை பேசுங்க என கேட்க நான் மூணாவது இருந்து ஐந்தாவது வரையும் இங்கே தான் படித்தேன் எனக் கூற சிம்பு சிரிக்கும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
வீடியோவைக் காண: https://x.com/itzSekar/status/1830852874210783438