
Cinema News
நான் அந்த வயசுலயே எல்லாம் பாத்துட்டேன்.! ராஷி கண்ணாவின் மனதை உலுக்கிய கசப்பான சம்பவம்.!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து, அங்கு பிரபல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு அதன் பிறகு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ராசி கண்ணா. தமிழில் விஜய் சேதுபதி, விஷால், ஜெயம் ரவி ஆகியோர் படத்தில் நடித்து பிரபலமானார்.
இவர் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களும் நடித்துள்ளார். அதே போல படத்திற்கு தேவையான கிளாமர் காட்சி, முத்த காட்சி என இறங்கி நடித்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இதனாலே தற்போதும் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருக்கிறார்.
இவர் முத்த காட்சிகளில் நடிப்பது பற்றியும், கிளாமர் காட்சிகளில் நடிப்பது பற்றியும் , திருமணம் பற்றியும் ஒரு முறை இவரிடம் கேட்கப்பட்டதாம். அதற்கு பதிலளித்த ராசி கண்ணா, ‘ நான் இளம் வயதிலேயே காதல் தோல்வியை சந்தித்து விட்டேன். அதனால், அந்த வழி என்ன என்பது அப்போதே தெரிந்து கொண்டேன்.
இதையும் படியுங்களேன் – பாகுபலிக்கு போட்டியாக தயாராகும் தனுஷின் புதிய படம்.! இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.?
ஆனால், நான் கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன். எனக்கு முத்தக்காட்சி என்பது, சண்டை காட்சி, சோக காட்சிகளில் நடிப்பது போல அதுவும் நடிப்பு அவ்வளவு தான். அப்படி தான் நான் கிளாமர் காட்சிகளையும் பார்க்கிறேன்.’ என ஓர் பக்கா அனுபவசாலி போல பேசினாராம். இதனை பிரபல சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் தெரிவித்து இருந்தார்.