Connect with us

அம்மா நடிகைகளுடன் நவராத்திரி பாடலுக்கு ஆடி பாடும் ராஷ்மிகா.. வைரலாகும் வீடியோ!

rashmika mandanna

latest news

அம்மா நடிகைகளுடன் நவராத்திரி பாடலுக்கு ஆடி பாடும் ராஷ்மிகா.. வைரலாகும் வீடியோ!

கன்னடாவில் கடந்த 2016ல் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இப்படத்தின் வெற்றியையடுத்து இவர்க்கு பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தின் நாயகனான ராக்ஷித் ஷெட்டியுடன் காதலில் விழுந்தார் ராஷ்மிகா.

இதையடுத்து இருவரும் நிச்சயதார்த்தத்தை பிரமாண்டமாக செய்துகொண்டார்கள். அதன்பின் ஒருசில காரணங்களால் இவர்களது திருமணம் திடீரென நிறுத்தப்பட்டது. கிரிக் பார்ட்டி படத்திற்குப் பின் கன்னடாவில் சில படங்களில் நடித்த இவர் சலோ படம் மூலம் தெலுங்கிலும் நாயகியானார்.

இனி மூடி மறைக்க முடியாது- கர்ப்பமான செய்தியை வெளியிட முடிவு செய்த பிரபல நடிகை

தெலுங்கில் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம் படத்தில் ஒரு பாடலில் இடுப்பை காட்டி, அந்த ஒரு காட்சியின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதையடுத்து குறுகிய காலத்திலே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையானார்.

rashmika mandanna

rashmika mandanna

அங்கு மகேஷ் பாபுவுடனெல்லாம் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக உள்ளார். கன்னடா மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.

இப்படம் சரியாக ஓடாததால் இவருக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதற்காக இவரது பெயரும் அடிபடுகிறது. தற்சமயம் தெலுங்கில் இவர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து வருகிறார்.

வடிவேலுவின் புதிய படத்துக்கு இதான் டைட்டில்… என்ன ஒரு வில்லத்தனம்!….

மேலும், ‘ஆடவாலு மீக்கு ஜோஹார்லு’ என்ற தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடன் சேர்ந்து நடிகை ராதிகா, ஊர்வசி, குஷ்பூ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தில் ‘எங்கேயும் எப்போதும்’ சர்வானந்த் நாயகனாக நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பின் போது ராஷ்மிகா, ராதிகா, ஊர்வசி ஆகியோர் ‘நவராத்திரி சுபராத்திரி’ என்ற பழைய தமிழ் பாடலை பாடி ஆடியுள்ளனர். இந்த வீடியோவை ராதிகா தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

 

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top