வேண்டாம் செல்லாக்குட்டி..இப்ப அது வேண்டாம்!.. ராஷ்மிகாவை எச்சரிக்கும் ரசிகர்கள்....
தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘புஷ்பா’படத்தில் இவர்தான் கதாநாயகி. இப்படத்தில் ‘ஓ சாமி’ பாடல் ரசிகர்களை சுண்டி இழுத்து ஹிட் ஆகியுள்ளது.
இந்நிலையில், திடீரென பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதை ஒன்றில் அவர் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தை தெலுங்கில் ஹிட் அடித்த Chi La Saw படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பெற்ற இயக்குனர் ராகுல் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.
நடிகைகள் பல படங்களில் நடித்த பின்னரே பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்குவார்கள். நயன்தாரா கூட அப்படித்தான் நடிக்க துவங்கினார். அதோடு, பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் எனில் பெரும்பாலும் சீரியஸான கதைகள்தான் அமையும்.
ஆனால், ராஷ்மிகாவிடம் ரசிகர்கள் ரசிப்பதே அவரின் ஜாலியான க்யூட் எக்ஸ்பிரசன்தான். எனவே, இப்பது அது வேண்டாம் செல்லாக்குட்டி’ என் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் அவருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.