நடிகருடனான காதலை ஒத்துக்கொண்ட ராஷ்மிகா… இவ்வளவு நாள் மறச்சிட்டியே செல்லம்!..

by Akhilan |   ( Updated:2024-11-25 03:52:50  )
rashmika
X

rashmika

Rashmika: புஷ்பா இரண்டாம் பாகத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சென்னையில் கலந்து கொண்ட நடிகர் ராஷ்மிகா மந்தனா நடிகருடனான தன்னுடைய காதல் குறித்த ரகசியத்தை உடைத்து இருக்கிறார்.

கன்னட சினிமாவில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு படமான கீதா கோவிந்தம் மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். தொடர்ச்சியாக வளர்ந்து வந்தவர் தமிழிலும் தன்னுடைய கவனத்தை திருப்பினார்.

இதையும் படிங்க:கடும் சிக்கலில் மாட்டிய ரஜினி… தூக்கி விட்ட கண்ணதாசன்… அட அந்தப் படமா?

அந்த வகையில் தமிழில் சூப்பர் ஹிட் திரைப்படமான வாரிசு மற்றும் சுல்தானில் நடித்து தமிழ் ரசிகர்களையும் கொள்ளைக் கொண்டார். இப்படங்கள் மட்டுமல்லாமல் பேன் இந்தியா திரைப்படம் ஆன புஷ்பா, அனிமல், சீதாராமம் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஹிட் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் ராஷ்மிகா, அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் விரைவில் ரிலீஸிருக்கு தயாராகி இருக்கிறது. இப்படத்தில் முதற்கட்ட பிரமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழு தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று பிரமாண்டமாக புஷ்பா2 நிகழ்ச்சி நடந்தது.

இதில் தொகுப்பாளர் ராஷ்மிகாவிடம், சினிமா துறையா அல்லது வேறு துறையிலிருந்து மாப்பிள்ளை வரவேண்டுமா என நீங்கள் சொல்லிவிட்டால் அதைக் கூட்டி கழித்து நாங்கள் ஒரு முடிவுக்கு வந்து விடுவோம் என கேள்வி கேட்டு இருப்பார்.

இதையும் படிங்க: வேள்பாரியை சினிமாவா மாத்த முடியுமா? பிரபல எழுத்தாளர் இயக்குனர் ஷங்கருக்குக் கேள்வி

rashmika_vijaya devarakonda

rashmika_vijaya devarakonda

சமீபத்தில் ராஷ்மிகா வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் இருவரும் டேட்டிங் ரகசியம் உடைந்த நிலையில் மேடையில் தன்னுடைய காதலை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விரைவில் கல்யாண சேதி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Next Story