இது டீப் ஃபேக்லாம் இல்ல!.. பக்கா ஒரிஜினல்!.. பளிச் அழகில் சுண்டி இழுக்கும் ராஷ்மிகா மந்தனா!.
Rashmika mandana: கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா துவக்கத்தில் கன்னட படங்களில் நடித்தார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று நடிக்க துவங்கினார். விஜய தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம் படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. இந்த படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானார்.
தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக மாறி இளம் ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடித்தார். சுல்தான் படம் மூலம் தமிழுக்கு எண்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் விஜய் நடித்த வாரிசு படத்தில் நடித்தார்.
விஜயின் தீவிர ரசிகையான இவர் கில்லி படம் பார்த்த விஜயின் ரசிகையாக மாறிவிட்டதாக சொல்லியிருந்தார். மேலும் வாரிசு பட பூஜையில் அவரின் கன்னத்தை தொட்டு சொடக்கு எடுத்து விஜயை கூச்சப்பட வைத்தார். சமீபத்தில் இவரின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். ஒருபக்கம் பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். அதுவும் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரன்பீர் கபூருடன் லிப்லாக் காட்சிகளில் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்களை அதிர வைத்தார்.
ஒருபக்கம், கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். அந்த வகையில், புடவையும், கவர்ச்சியான ஜாக்கெட்டும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.