சும்மா ஜிவ்வுன்னு இழுக்குது!.. சைனிங் அழகை நச்சின்னு காட்டும் ராஷ்மிகா..

by சிவா |   ( Updated:2023-11-26 01:58:00  )
சும்மா ஜிவ்வுன்னு இழுக்குது!.. சைனிங் அழகை நச்சின்னு காட்டும் ராஷ்மிகா..
X

Rashmika mandana: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா முதலில் நடித்தது கன்னட படத்தில்தான். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து அவர் நடித்த 'கீதா கோவிந்தம்' திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ராஷ்மிகா தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானார்.

rashmika

rashmika

அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கி முன்னணி நடிகையாக மாறினார். தெலுங்கில் இளம் ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் வாரிசு படத்தில் விஜயுடன் நடித்தார்.

அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வெளியான புஷ்பா திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் வெளியாகி ராஷ்மிகா பேன் இண்டியா அளவில் பிரபலமானார். அதைத்தொடர்ந்து அவருக்கு ஹிந்தி பட வாய்ப்புகளும் வர துவங்கியது.

rashmika

அமிதாப்பச்சனுடன் ஒரு படத்தில் நடித்த ராஷ்மிகா இப்போது ரன்பீர் கபூருடன் இணைந்து 'தி அனிமல்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஏகப்பட்ட லிப்லாப் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

rashmika

ஒருபக்கம், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வரும் ராஷ்மிகா, சைனிங் அழகை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

rashmika

Next Story