தளபதி 66 பட வாய்ப்பை தட்டி தூக்கிய பிரபல நடிகை...செம காண்டில் அந்த நடிகை....
பீஸ்ட் திரைப்படத்திற்கு பின் நடிகர் விஜய் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் விஜய்க்கு 66வது திரைப்படமாகும். இப்படத்தை தோழா பட இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார்.
மேலும், தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இப்படம் பிரம்மாண்ட செலவில் உருவாகவுள்ளது. கடந்த 20 வருடங்களில் இப்படி ஒரு கதையை நான் கேட்கவில்லை என விஜயே சொன்னதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகளிடம் போட்டி நிலவியது. கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா என பலரின் பெயர்களும் அடிபட்டது. பீஸ்ட் படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே நடித்திருப்பதால் அவரே இப்படத்திலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த வாய்ப்பை ராஷ்மிகா மந்தனாவுக்கு சென்றுவிட்டது. எனவே, முதன் முறையாக விஜயுடன் ஜோடி சேரவுள்ளார் ராஷ்மிகா மந்தனா. புஷ்பா திரைப்படம் மூலம் இந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலாகியுள்ள ராஷ்மிகாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால், பூஜா ஹெக்டே செம கடுப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கவுள்ளது. இப்படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.