Cinema News
நயன்தாராவை ஓவர் டேக் செய்த ராஷ்மிகா மந்தனா!.. சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?….
Nayanthara: கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் துவக்கத்தில் மலையாள தொலைக்காட்சி ஒன்றில் ஆங்கராக வேலை பார்த்தவர். இவரின் புகைப்படம் ஒன்றை ஒரு புத்தகத்தில் பார்த்த இயக்குனர் ஹரி அவர் இயக்கிய ‘ஐயா’ படத்தில் இவரை அறிமுகப்படுத்தினார்.
அதன்பின் தொடர்ந்து தமிழில் நடிக்க துவங்கினார். ஆனால், ரசிகர்களிடம் கவனம் ஈர்க்கவில்லை. கொஞ்சம் குண்டாக இருந்த நயன் ஒரு கட்டத்தில் உடல் எடையை குறைத்து அழகாக மாறினார். அப்படி அவர் நடித்து வெளியான ராஜா ராணி மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய திரைப்படங்கள் வெற்றியை பெற்றது.
இதையும் படிங்க: பின்வாங்கும் புஷ்பா 2!. ஆகஸ்டு 15-க்கு களமிறங்கும் இரண்டு முக்கிய படங்கள்!…
இதைத்தொடர்ந்து நயன்தாராவின் கிராப் கோலிவுட்டில் மேலே ஏறியது. அஜித் மற்றும் விஜயுடன் ஜோடி போட்டு நடிக்கும் முன்னணி நடிகையாக மாறினார். ஒருபக்கம், ஹீரோ இல்லாமல் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள அறம், மாயா, நெற்றிக்கண், அன்னபூரனி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார்.
நயன்தாராவுக்கென ரசிகர்களும் உருவானார்கள். அதோடு, லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டமும் கிடைத்தது. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறினார். ஒரு படத்திற்கு 6 கோடி சம்பளம் வாங்கி வந்த நயன்தாரா இப்போது 10 கோடியை தொட்டுவிட்டார்.
இந்நிலையில்தான், ராஷ்மிகா மந்தனா நயனை ஓவர் டேக் செய்திருக்கிறார். தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கிய ராஷ்மிகா தமிழ், ஹிந்தி படங்களிலும் நடித்து பேன் இண்டியா நடிகையாக மாறி இருக்கிறார். ரன்வீர் கபூருடன் ராஷ்மிகா நடித்த அனிமல் படம் ஹிந்தியில் நல்ல வசூலை பெற்றது. எனவே, அம்மணிக்கு பாலிவுட்டில் கிராப் ஏறியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ள புதிய படத்தில் ராஷ்மிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்திற்கு ராஷ்மிகாவுக்கு கொடுக்கப்படவுள்ள சம்பளம் ரூ.13 கோடி என சொல்லப்படுகிறது. ராஷ்மிகா தன்னை ஓவர்டேக் செய்துவிட்டதால் அவரை நயன் தாண்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.