இப்படி காட்டினா குளிர் ஜுரமே வந்திடும்!...தூங்கவிடாம பண்ணும் ராஷ்மிகா மந்தனா...
கன்னட திரைப்படத்தில் நடிக்க துவங்கி தெலுங்கு, தமிழ் என நடித்து தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு திரைப்படங்களில் அம்மணி கொடுத்த க்யூட் எக்ஸ்பிரசன்களால் மொத்த ஆந்திராவும் சொக்கிப்போனது.
கீதாகோவிந்தம், சாம்ராட், புஷ்பா என அவர் நடித்த திரைப்படங்கள் வசூலில் சக்கை போடு போட்டது. அதுவும் புஷ்பா திரைப்படம் பேன் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்களிடம் ராஷ்மிகாவை நெருக்கமாக்கியுள்ளது.
அப்படத்தில் சாமி பாடலுக்கு அவர் போட்ட நடனம் இளசுகளின் தூக்கத்தை கெடுத்தது. தற்போது அமிதாப்பச்சனுடன் ஒரு ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார் ராஷ்மிகா.
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு ஆங்கில பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு கவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.