கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படத்தில் நடிக்க துவங்கி பின் தெலுங்கு பக்கம் சென்றார். தெலுங்கு திரைப்படங்களில் அம்மணி கொடுத்த க்யூட் எக்ஸ்பிரசன்களால் மொத்த ஆந்திராவும் சொக்கிப்போனது. தற்போது, கோலிவுட், பாலிவுட் என கலக்கி வருகிறார்.
ராஷ்மிகா நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் பேன் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்களிடம் ராஷ்மிகாவை நெருக்கமாக்கியுள்ளது.
அப்படத்தில் சாமி பாடலுக்கு அவர் போட்ட நடனம் இளசுகளின் தூக்கத்தை கெடுத்தது. தற்போது அமிதாப்பச்சனுடன் ஒரு ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார் ராஷ்மிகா.
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் பகிர்ந்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்துக்கு…
ஜனநாயகன் படம்…
தமிழ் சினிமாவில்…
பொல்லாதவன் படம்…
இந்த பொங்கலுக்கு…