கன்னட படத்தில் நடிக்க துவங்கி அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்று அங்கு நம்பர் ஒன் நடிகையாக மாறியவர் ராஷ்மிகா மந்தனா. மகேஷ் பாபு உள்ளிட்ட பல இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். விஜய தேவரகொண்டவுடன் இவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் இவரை தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. சில படங்களில் ஒன்றாக நடித்ததால் இருவருக்கும் இடையே காதலும் மலர்ந்தது.
தமிழில் சுல்தான், வாரிசு, குபேரா போன்ற படங்களில் நடித்திருந்தார் ராஷ்மிகா. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக இவர் நடித்த வெளியான புஷ்பா, புஷ்பா 2 படங்கள் அசத்தலான வெற்றியை பெற்றது. அதிலும் புஷ்பா 2 படம் 1800 கோடி வசூலை பெற்றது. இந்நிலையிதான் வருகிற 26ம் தேதி ராஷ்மிகா – விஜய தேவரகொண்டா திருமணம் ஜெய்ப்பூரில் நடக்கவிருக்கிறது..
ராஷ்மிகா தற்போது அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் வில்லியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. வருகிற 22ம் தேதி வரை தேதி அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். அதன்பின் அடுத்து நான்கு நாட்கள் திருமணம் தொடர்பான நிகழ்வுகள் நடக்கும் என தெரிகிறது.
சமீப காலமாகவே சினிமா பிரபலங்கள் செய்து கொள்ளும் திருமணம் தொடர்பான விழா நான்கு நாட்கள் நடக்கிறது. எனவே இது தொடர்பான புகைப்படங்கள் ஒவ்வொன்றாய் வெளியாகும் என தெரிகிறது..
