Connect with us

Cinema News

ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு!.. ராஷ்மிகா மந்தனா காலில் பட்டுனு விழுந்த மாப்பிள்ளை!.. வைரலாகும் வீடியோ..

திருமண விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா காலில் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெங்களூருவை சேர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் அறிமுகமான நிலையில், அவரது க்யூட்டான நடிப்பு மற்றும் எக்ஸ்பிரஷன்ஸ் காரணமாக தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: ஆதிபுருஷுக்கு ஆனது மாதிரி நடந்துட்டா என்ன பண்றது!.. சலார் படத்திற்காக பிரபாஸ் எடுக்கும் பெரிய ரிஸ்க்!..

விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், நடிகை ராஷ்மிகாவுக்கு மகேஷ் பாபுவின் சரிலேரு நீக்கெவ்வரு படத்தில் நடிக்க ஜாக்பாட் அடித்தது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கிய ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

இதையும் படிங்க: அடுத்த கிரணா மாறிட்டாரா அமலா பால்!.. கோவாவில் குடியும் குடித்தனமுமாக இவரும் செட்டில் ஆகிடுவாரு போல!..

சுல்தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த வாரிசு திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை அள்ளினாலும் 300 கோடி வசூல் ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உச்சகட்ட கவர்ச்சியை காட்டி ரஞ்சிதமே, ஜிமிக்கு பொண்ணு உள்ளிட்ட பாடல்களில் நடனமாடி தன்னை ஏன் நேஷ்னல் கிரஷ் என அழைக்கின்றனர் என்பதை நிரூபித்து இருந்தார்.

கோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்டில் அமிதாப் பச்சனின் குட் பை படத்தில் நடித்த ராஷ்மிகா தற்போது ரன்பீர் கபூரின் அனிமல் படத்திலும் நடித்துள்ளார். விரைவில் அந்த படம் வெளியாகி மிரட்ட காத்திருக்கிறது.

இதையும் படிங்க: மூடு மாறுது.. அத கொஞ்சம் மூடு செல்லம்!. மாராப்ப விலக்கி மனச கெடுக்கும் பிரக்யா…

நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், இந்த ஆண்டு இருவருக்கும் திருமணம் ஆகப் போவதாகவும் கூறுகின்றனர். ஆனால், இதுவரை இருவரும் அதை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற தனது உதவியாளரின் திருமணத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்ட வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா மணமக்களை வாழ்த்த மேடை ஏறிய போது சட்டென மணமகன் ராஷ்மிகா மந்தனா காலில் விழுந்து ஆசி வாங்கினார். கூடவே மணப்பெண்ணும் காலில் விழுந்தார்.

திடீரென இப்படி நடந்ததை பார்த்து ராஷ்மிகா மந்தனாவுக்கே ஆச்சர்யம் தாங்கமுடியாமல் அவர் கொடுத்த எக்ஸ்பிரஷன் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top