நயன்தாராவை அந்த விஷயத்தில் ஓவர் டேக் செய்யும் வாரிசு கதாநாயகி?? இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான்!!

Published on: December 31, 2022
Nayanthara and Rashmika
---Advertisement---

தென்னிந்தியாவின் டாப் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கும் நயன்தாரா, தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிக்கும் “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நயன்தாரா தனது 75 ஆவது திரைப்படத்தை நெருங்க உள்ளார். இவ்வாறு தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார்.

Nayanthara
Nayanthara

அதன் பின் சில மாதங்களிலேயே இருவருக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்ததாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்தனர். திருமணம் ஆகி நான்கே மாதங்கள் ஆன நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக கூறிய தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து வாடகைத் தாய் மூலமாக  நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் குழந்தை பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்தது.

எனினும் திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்க வழியே இல்லை என்ற நிலையில் இருக்கும் தம்பதிகள்தான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று சட்டம் கூறுவதாகவும், தற்போது சட்டத்தை மீறி இருக்கும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் பலர் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்துவிட்டதாக விசாரணையின் மூலம் தெரியவந்தது.

Nayanthara
Nayanthara

இவ்வாறு 2022 ஆம் ஆண்டின் டிரெண்டிங்கில் முக்கியமான இடம்பிடித்திருந்த நயன்தாராவை “வாரிசு” படத்தின் கதாநாயகியான ராஷ்மிகா மந்தனா தற்போது ஓவர் டேக் செய்துள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது இதுவரை நயன்தாராதான் பல நிபந்தனைகள் இடும் நடிகையாக திகழ்ந்தாராம். “படப்பிடிப்பிற்கு இந்த காரில்தான் செல்வேன், எனக்கு இத்தனை பவுன்சர்கள் வேண்டும்” போன்ற நிபந்தனைகளை இடுவாராம். ஆனால் தற்போது இவரின் வரிசையில் ராஷ்மிகா மந்தனாவும் இணைந்துள்ளாராம்.

இதையும் படிங்க: மணிரத்னத்தை தொடர்ந்து ராஜமௌலியுடன் கைக்கோர்க்கும் உலகநாயகன்… ஆண்டவர் லிஸ்ட் இப்படி நீண்டுகிட்டே போகுதே!!

Rashmika
Rashmika

அதாவது சினிமா சம்பந்தமான விழாக்களுக்குச் செல்லும்போது தன்னுடைய காருக்கு முன்னால் ஒரு காரும், பின்னால் ஒரு காரும் பவுன்சர்களை ஏற்றிக்கொண்டு வரவேண்டும் என்றும், அதே போல் விழா நடக்கும் இடத்தை அடைந்தவுடன் அவருக்கு முன்னாலும் பின்னாலும் உள்ள காரில் இருக்கும் பவுன்சர்கள் அவர் காரை விட்டு இறங்குவதற்கு முன்பே இறங்கி அங்குள்ள கூட்டத்தை கட்டுப்படுத்தி விழா அரங்கிற்குள் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் எனவும் ராஷ்மிகா கண்டிஷன் போடுகிறாராம்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.