அந்தப்பக்கம் இருக்கும் ரகசிய காதலரை காட்டமாட்றீங்களே ராஷ்மிகா!.. பர்த்டே பேபியின் அவுட்டிங் பிக்ஸ்!

#image_title
நேஷ்னல் கிரஷ்ஷாக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் 29வது பிறந்த நாளை முன்னிட்டு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன..

ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்டி என்ற கன்னட படம் மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து அஞ்சனி புத்ரா, சமக், எஜமானா போன்ற பல கன்னட படங்களில் நடித்து வந்த அவர் கீதா கோவிந்தம் படம் மூலம் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக தெலுங்கில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும், புஷ்பா படத்தின் இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றியை கொடுத்தது. சுல்தான், வாரிசு உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் அனிமல் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவிந்தன. அதை தொடர்ந்து சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள சாவா படத்திலும் நடித்திருந்தார். அந்த படம் 700 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. சமீபத்தில் சல்மான் கானுடன் ஜோடியாக நடித்த சிக்கந்தர் திரப்படம் வெளியாகி எதிர்ப்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் வரை சென்று சில காரணங்களுக்காக இருவரும் பிரிந்தனர். மேலும், ராஷ்மிகா நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக தகவல்கள் பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு இருவரும் அமைதி கார்த்து வருவதை பார்த்தால் அது உண்மையாக கூட இருக்காலாம் என்கின்றனர். ஆனால், இதுவரை இருவரும் ஓபனாக சொல்லாமல் இருந்தாலும் பல தடையங்களை அடிக்கடி விட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராஷ்மிகாவின் 29வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கடலோரத்தில் கேப் அணிந்துக்கொண்டு கூலாக ஃபுல் மீல்ஸ் சாப்பிடும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். என்னுடைய ஜிம் டிரெய்னர்கள் உணவுக்கட்டுப்பாடு விதித்து என்னை டென்ஷனாக்கி வருகின்றனர். ரொம்ப நாள் கழித்து நல்ல உணவை உண்டேன் என பதிவிட்டுள்ளார். அந்த பக்கம் இருப்பது விஜய் தேவரகொண்டாதானா என்றும் இந்த பிறந்தநாளுக்கும் காதலரை அறிமுகம் செய்யாமல் ரகசியம் காப்பது ஏனோ என கேள்விகள் கிளம்பியுள்ளன.