
Entertainment News
ஐஸ் க்ரீம் உருகுதோ இல்லையோ!.. காதலரை பார்த்து ராஷ்மிகா மந்தனா இப்படி உருகுறாரே!..
நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா ஐஸ்க்ரீம் சாப்பிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ராஷ்மிகாவிற்கு எதிரில் இருப்பது யார் என ரசிகர்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த 2016ம் ஆண்டு கன்னட படமான கிரிக் பார்ட்டி மூலம் அறிமுகமானார்.அதை தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் நடிகர் விஜய்தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படம் ராஷ்மிகாவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்திலும் நடித்திருந்தார்.
தெனிந்தையாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் தற்போது கலக்கி வருகிறார். நடிகர் ரன்பீர் கபூருடன் நடித்த அனிமல் திரைப்படம் ஃப்ளாக் பஸ்டர் ஹிட் கோடுத்தது. அந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டிலும் ராஷ்மிகாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படத்திலும் ராஷ்மிகா நடித்துள்ளார். அதில் சத்தியராஜ், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் ராஷ்மிகா சமிபத்தில் வெளியான சாவ்வா திரைப்படத்தில் விக்கி கவுசலுக்கு ஜொடியாக நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படம் 750 கோடிக்கு மேல் வசுலை குவித்து வருகிறது.
மேலும் தனுஷ் மற்றும் நாகார்ஜுனாவுடன் குபேரா, ஆயுஷ்மான் குரானாவுடன் தாமா என பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனா நைட் டின்னரில் ஐஸ்க்ரீமை ரசித்து சாப்பிடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். அவர் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை ரசிகர்கள் ரசித்தாலும் அந்த வீடியோவில் ராஷ்மிகாவின் எதிரில் இருப்பது விஜய் தேவரகோண்டாவாகத்தான் இருக்கும் என்றும் ஏன் ஜோடியாக போட்டோக்களை வெளியிடுவதில்லை என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.