ராஷ்மிகாவின் காதலர் இவர் தானா? அனிமல் படக்குழு மொத்தமாக போட்டுடைத்த உண்மை.. கவலையில் ரசிகர்கள்..!

Rashmika: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கிறது தி அனிமல் திரைப்படம். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ராஷ்மிகா கலந்து கொண்டு இருந்தார். அதில் கிட்டத்தட்ட அவர் காதலர் யார் என தகவல்கள் கசிந்து விட்டது.

கன்னடாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படமான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா. தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 2018ல் இவர் நடித்த கீதா கோவிந்தம் படம் இவருக்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்களை குவித்தது.

இதையும் படிங்க: நான் திறமையான நடிகன்… அதிர்ஷ்டத்தில் ஹீரோவான ரஜினிகாந்த்… ராதாராவி சொல்லும் சூடான சம்பவம்..!

அப்போதில் இருந்து இவருக்கும் ஜோடியாக நடித்த விஜய் தேவரகொண்டாவிற்கும் காதல் என பலரும் கிசுகிசுத்தனர். கிட்டத்தட்ட ஒருவரின் இன்ஸ்டா பதிவுகளும் ஒரே மாதிரியாக இருக்கும். பல இடங்களில் இருவரையும் ஒன்றாக பார்க்கும்படி புகைப்படங்களும் ரிலீஸ் ஆனது. ஆனால் இருவரும் இந்த செய்திகளுக்கு இதுவரை மறுப்பும் தெரிவிக்கவில்லை.

தற்போது ராஷ்மிகா இந்தியில் ரன்வீருடன் தி அனிமல் படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தினை அர்ஜூன் ரெட்டி படத்தினை இயக்கிய சந்தீப் ரெட்டி தான் இயக்கி இருந்தார். தற்போது படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து இருக்கும் நிலையில் படக்குழு ப்ரோமோஷனில் பிஸியாகி இருக்கிறது.

அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ராஷ்மிகாவை விஜய் தேவரகொண்டாவுடன் இணைத்து சந்தீப் ரெட்டி மற்றும் ரன்வீர் தொடர்ச்சியாக கலாய்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் அர்ஜூன் ரெட்டியா? அனிமல் மூவியா என ராஷ்மிகாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இதையும் படிங்க: பிச்சைக்காரன் பட வாய்ப்பை மிஸ் பண்ண நடிகர்!. இப்பவும் ஃபீல் பண்றாராம்!.. வட போச்சே!…

சமீபத்தில் கூட விஜய் தேவரகொண்டா பெண்ணின் கையை பிடித்தப்படி ஒரு புகைப்படத்தினை போட்டு இருப்பார். ஒருவேல அது ராஷ்மிகாவின் கை தானோ என ரசிகர்கள் தற்போது டீகோட் செய்யும் வேலையில் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ராஷ்மிகா வீடியோவைக் காண: https://www.instagram.com/reel/C0A0JqPvxir/

 

Related Articles

Next Story