Categories: latest news

பங்களாக்களை வாங்கி குவிக்கும் ராஷ்மிகா மந்தனா…! ஒரே ஆண்டில் 3 நகரங்களில் 3 பெரிய பங்களாக்கள்..!

தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகையான ராஷ்மிகா மந்தனா கர்நாடகா, மும்பை, கோவா ஆகிய நகரங்களில் 3 பெரிய பங்களாக்களை வாங்கியுள்ளார்.

Also Read

தெலுங்கு திரைப்படத்தில் கீதா கோவிந்தம் படம் மூலம் அறிமுகமானாலும், தமிழ் ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்தார். குறிப்பாகத் தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப் படங்களில் மட்டுமில்லாமல் சமூகவலைத்தளங்களிலும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ராஷ்மிகா, தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கு ஏற்றார்போல், மும்பையில் ஒரு அப்பார்ட்மெண்ட்டும், கோவாவில் ஒரு பங்களாவும், கர்நாடகாவில் குடும்பத்துக்காக ஒரு அபார்ட்மெண்ட்டும் இந்தாண்டு வாங்கியுள்ளாராம். மேலும், புதிதாக வாங்கிய கோவா பங்களாவின் புகைப்படத்தைத் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீட்டின் நீச்சல் குளத்தின் அருகே புத்தர் சிலை என்று வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் புது வீடு வாங்கிய அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும், தளபதி விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது குறித்துப் பேசப்பட்டு வருகிறது. தற்போது கைவசம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் புஷ்பா படத்தில் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

Published by
adminram