
Cinema News
விபச்சாரி ரோலில் ராஷ்மிகா ? புஷ்பா படத்திற்கு வலு சேர்க்கும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம்!
‘ரங்கஸ்தலம்’ பட இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். வில்லனாக பஹத் பாசில் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தை (முட்டம்செட்டி மீடியாவுடன் இணைந்து) மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் புஷ்பா படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தாவின் போஸ்டர் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த போஸ்டரில் ஏழ்மையான பெண்ணாக இருக்கும் ஸ்ரீவள்ளி வறுமைக்காகவும் குடும்ப சூழ்நிலைக்காகவும் விபசாரத்திற்குள் தள்ளப்பட்டது போல் தெரிகிறது.

pushpa
ஏழ்மையான வீட்டில் சமையல் செய்துக்கொண்டிருக்கும் போது யாரேனும் அழைத்ததால் அவசரமாக உடைகளை மாற்றிக்கொண்டு கண்ணாடி முன் அமர்ந்து காதணி அணிகிறார். இந்த போஸ்டரில் ஸ்ரீவள்ளி 40 வயசுத்திற்கு மேல் கணவனை இழந்த பெண்ணாக வீட்டில் தனியாக இருப்பது போன்று போஸ்டர் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரம் நிச்சியம் படத்திற்கு வலுசேர்க்கும் ரோலாக இருக்கும் என கூறி ராஷ்மிகாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.