Connect with us

நாய் குட்டிக்கு நான் டிக்கெட் கேட்டேனா.?! கொந்தளித்த தளபதி 66 கதாநாயகி.!

Cinema News

நாய் குட்டிக்கு நான் டிக்கெட் கேட்டேனா.?! கொந்தளித்த தளபதி 66 கதாநாயகி.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன் உடன் நடித்த புஷ்பா படத்தின் மூலம் இந்திய அளவில் ரசிகர்களை பெற்றுவிட்டார்.

இவர் தற்போது தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்கி வருகிறார். மேலும் மிஷன் மஞ்சு, குட்பை போன்ற ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் வெளியூர் செல்லும் சமயங்களில் தனது செல்ல பிராணியாக நாய்குட்டியையும் உடன் எடுத்து செல்கிறார். அதனால், தயாரிப்பாளர்களிடம் அந்த நாய்க்குட்டிக்கு சேர்த்து டிக்கெட் போட சொல்கிறார் என ஒரு டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இதையும் படியுங்களேன் – கழக தலைவர் ஆகிறார் உதயநிதி.! சத்தியமா இது அரசியல் நியூஸ் இல்லைங்க…

இதனை பார்த்த ராஷ்மிகா கொந்தளித்து விட்டார். உங்கள் அக்கறைக்கு நன்றி. நீங்கள் விரும்பினாலும், அவள் (நாய்க்குட்டி) என்னுடன் பயணிக்க விரும்பவில்லை. அவள் ஹைதிராபாத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள்’ என அந்த டிவிட்டர் பக்கத்துக்கு காட்டமாக பதில் பதிவிட்டு உள்ளார் ராஷ்மிகா.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top