
Entertainment News
இதான் செல்லம் உன்கிட்ட புடிச்சது…! அசத்தும் அழகில் போஸ் கொடுக்கும் ராஷ்மிகா…
கன்னட திரைப்படத்தில் நடிக்க துவங்கியவர் ராஷ்மிகா மந்தனா. அதன்பின் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு விஜய தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் அவருக்கு அங்கு ரசிகர்களை உருவாக்கி தந்தது.
அப்படியே முன்னேறி அங்கு முன்னணி நடிகையாக மாறினார். தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் நடித்தார். அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து வெளியான புஷ்பா திரைப்படம் அவரை அனைத்து மொழி திரைப்பட ரசிகர்களிடம் பிரபலமடைய வைத்துள்ளது.
தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
இந்த நிலையில் பஞ்சாபி டிரெஸில் ஆளை மயக்கும் அழகில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார்.