Home > Cinema News > வம்பை தானே வாங்கி கொண்ட ராஷ்மிகா...! ஒரு பதிவை போட்டு விழிபிதுங்கி நிற்கும் அம்மணி...!
வம்பை தானே வாங்கி கொண்ட ராஷ்மிகா...! ஒரு பதிவை போட்டு விழிபிதுங்கி நிற்கும் அம்மணி...!
by Rohini |
X
தன்னுடைய கொஞ்சும் முகபாவனையால் ரசிகர்களை பரவசப்படுத்தி வரும் தென்னிந்திய நடிகைகளில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கொஞ்சி கொஞ்சி பேசும் அந்த அழகுக்கு மயங்காதவர்களே இருக்க மாட்டார்கள். இவருக்கென்று தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
தற்போது விஜயுடன் சேர்ந்து தளபதி - 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் கவனம் செலுத்தி வந்த இவர் இப்பொழுது தமிழ் சினிமாவிலும் இடம் பிடிக்க முயற்சி எடுத்து வருகிறார். ஏற்கெனவே நடிகர் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் படத்தில் கிராமத்து பொண்ணாக நடித்திருப்பார்.
தற்போது விஜயுடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். தளபதி - 66ல் இணைந்தது அம்மணிக்கு பெரும் சந்தோஷத்தை தந்தது. இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் தேவையில்லாத வார்த்தகளை போட்டு கிண்டலடித்து வருகின்றனர். அதாவது தன்னுடைய பெயரான ‘ராஷ்மிகா மந்தனா’ என்பதை அழைப்பதற்கு உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் ஏனெனில் அது நீளமான பெயராம் அதனால் தன்னை ‘ரஷ்’ (‘rush') என்று அழையுங்கள் என்று கூறினார்.
மேலும் அப்படி எதும் அழைத்தால் நான் ஒன்றும் நினைக்கமாட்டேன் என்றும் சேர்த்து பதிவிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அவரை brush, crush,rushi என்று சகட்டுமானைக்கு பதில் கமென்ட்களை பதிவிட்டு ராஷ்மிகாவை கடுப்பேத்து வருகின்றனர். சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த மாதிரி எப்படி இருந்தால் என்ன கூப்பிடுகிறவர்கள் அவர்களுக்கு இஷ்டமான பெயரை வைத்து கூப்பிடுவார்கள். தானே வந்து மாட்டிக்கொண்டு பல்புகளை வாங்கிக் கொண்டு இருக்கிறார் அம்மணி.
Next Story