கேஜிஎப் நடிகரை கலாய்த்த ராஷ்மிகா... வசமாக வாங்கி கட்டிக்கொண்ட சம்பவம்...!
கேஜிஎப் என்ற ஒற்றை படம் மூலம் கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் யாஷ். இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றதோடு நடிகர் யாஷிற்கு ஏராளமான ரசிகர்களையும் உருவாக்கி கொடுத்தது. தற்போது கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் யாஷை பிரபல நடிகை எக்ஸ்பிரஷன் குயின் ராஷ்மிகா மந்தனா கேலி செய்து சிக்கலில் மாட்டியுள்ளார். அதன்படி கடந்த 2017ஆம் ஆண்டு கேஜிஎப் ஹீரோ யாஷ் குறித்து பேட்டி ஒன்றில் நடிகை ராஷ்மிகா மந்தனா பேசிய வீடியோ ஒன்று தற்போது விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.
அதன்படி நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை ரஷ்மிகாவிடம் கன்னட திரையுலகில் Mr Showoff என்றால் யாரை கூறுவீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஷ்மிகா சற்றும் யோசிகாமல் யாஷ் தான் என பதிலளித்தார். இதனால் கடுப்பான யாஷின் ரசிகர்கள் தற்போது ராஷ்மிகாவை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
தொடர்ந்து ரசிகர்களிடம் இருந்து கேலி மற்றும் விமர்சனங்கள் எழுந்ததால் இதுகுறித்து மன்னிப்பு கடிதம் ஒன்றை ராஷ்மிகா எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "எனக்கு நடிகர் யாஷை மிகவும் பிடிக்கும். உங்களைபோலவே எனக்கும் அவர் ஒரு ரோல் மாடல் தான். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது.
அவர் குறித்து அந்த நிகழ்ச்சியில் நான் பேசிய நல்ல வார்த்தைகளை அவர்கள் ஒளிபரப்பாமல் டிஆர்பிக்காக நான் சொன்ன அந்த விஷயத்தை மட்டும் ஒளிபரப்பி விட்டார்கள். இருப்பினும் நடந்த விஷயத்திற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்" என கூறியுள்ளார்.