வீடுகள் வாங்குவது பற்றி ராஷிமிகா விளக்கம்: இதெல்லாம் நம்புகிற மாதிரிய இருக்கு?-
ராஷ்மிகா மந்தனா இந்த பெயரை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஒரே பாடலில் உலக பேமஸ் ஆனவர் தான் ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் அறிமுகமாகி இருந்தாலும் அம்மணிக்கு தெலுங்கு சினிமாவில் தான் மவுசு அதிகம். தெலுங்கு தவிர தமிழ் சினிமாவில் நடித்து ராஷ்மிகா கைவசம் இரண்டு ஹிந்தி படங்களையும் வைத்துள்ளார்.
இப்போ விஷயம் இது இல்லைங்க. அம்மணி சமீபகாலமாகவே வீடுகளாக வாங்கி குவித்து வருகிறார். அவரது சொந்த ஊரான பெங்களூரில் ஒரு வீடும், மும்பையில் அபார்ட்மெண்ட்டும், கோவாவில் சொகுசு பங்களா என தொடர்ந்து மூன்று நகரங்களில் வீடுகளை வாங்கி குவித்தார். என்ன காரணமாக இருக்கும் என பலரும் யோசித்த நிலையில், தற்போது அவரே இதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
அதாவது ராஷ்மிகா என்ன கூறியுள்ளார் என்றால், "நான் படப்பிடிப்பிற்காக எந்த பகுதிக்கு சென்றாலும், ஹோட்டல்களில் தங்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. பல நாட்கள் படப்பிடிப்பிற்காக வெளியில் தங்குவதால், சொந்த வீடாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் நான் அதிகம் படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் வீடுகளை வாங்குகிறேன்" என கூறியுள்ளார்.
மேலும், "எனக்கு ஒரு தங்கை இருக்கிறார். அவரை என்னால் அதிக நாட்கள் பிரிந்து இருக்கவே முடியாது. எனவே தான் நான் செல்லும் இடங்களில் வீடுகளை வாங்கி வைத்துக் கொள்கிறேன். அவரையும் என் உடனே அழைத்து செல்கிறேன்" என கூறியுள்ளார்.
இவரின் காரணத்தை கேட்ட ரசிகர்கள் தங்கச்சி மேல அம்புட்டு பாசமா என இவரின் பாசத்தை மெச்சி வருகிறார்கள். இருந்தாலும் ஹோட்டல் பிடிக்கலனு வீடு வாங்குறதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் என்று ஒருபுறம் பேசுகிறார்கள்.