துணியே இல்லனா கூட இப்படி இருக்காது… ராஷ்மிகா காட்டியது ரொம்ப டூமச்சு… ஆஹான்!

தேசிய விருது சர்ச்சை இன்னமும் கூட ஓயவே இல்லை. தமிழ்படங்கள் தவிர்க்கப்பட்டதாக தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதையே தன்னுடைய சமீபத்திய பேட்டியில் திரை விமர்சகர் காந்தராஜ் தெரிவித்து இருக்கிறார்.

அவர் பேட்டியில் இருந்து, ஜெய்பீம் படத்துக்கு கொடுக்க வேண்டும் என்பது இல்லை. அது அரசாங்கத்துக்கு எதிரான படமாக அமைந்தது. சாதி பிரச்னை அதில் அதிகமாக பேசி அரசாங்கத்தினை அசிங்கப்படுத்தியதால் அந்த படத்துக்கு கொடுக்க மாட்டார்கள் தான். பெரிய ஜாதியை எதிர்த்ததால் அவர்கள் அவமானமாக கருதிக்கூட கொடுக்காமல் இருந்து இருக்கலாம்.

இதையும் படிங்க : லியோ படம் சுறா2 தான்… மாட்டு சந்தை மாதிரி இத்தன பேரையா எறக்குவானுங்க… இப்படியா டக்குனு சொல்லுவீங்க!

பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்துக்கே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த படத்துக்கே கொடுக்கவில்லை தானே. அவர் வந்ததற்கு பின்னர் தான் சினிமாவே மாறியது. அவருக்கே முதலில் தேசிய விருது கொடுக்கப்படவில்லை. தமிழ் சினிமாவையே வேறு விதமாக மாற்றியவர் அவருக்கே பல வருடம் கழித்து தான் கிடைத்தது.

தேசிய விருது கொடுக்கவில்லை என்று கவலைப்பட கூடாது. சிவாஜிக்கு விருது கொடுக்கவே இல்லை. அதனால் அவர் பெரிய நடிகர் இல்லை என்று ஆகிவிடுமா? கலைஞர்கள் கொடுத்தால் நமக்கு கிடைக்கவில்லை என விருது இல்லையே என வருத்தப்படலாம். யாரோ சிலர் தேர்வு செய்வதெல்லாம் விருது இல்லை. காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு கொடுத்து இருக்கிறார்கள். அந்த கூட்டத்துடன் நம்ம சேரவே கூடாது. அரசுக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே விருது கொடுப்பார்கள்.

இதையும் படிங்க : ‘ஜெய்லர்’ வசூலை முறியடிக்க பலே திட்டம்! ஒரு மாசத்துக்கு முன்பே பட்டரையை போட்ட‘லியோ’ குழு – இது ஓவர்தான்

இப்போது இருக்கும் படத்தினை பார்க்கவே முடிவது இல்லை. புஷ்பா நன்றாக தான் இருந்தது. விக்ரம் போதைக்கடத்தில், கே.ஜி.எஃப் தங்கக்கடத்தல், புஷ்பா மரக்கடத்தல். எல்லாம் ஒரே கதை தான். வேறுவேறு நடிகர்கள் நடித்தனர். ஒன்னுமே புரியல. இப்போ சினிமாவிற்கான கிரேஸ் குறைந்து விட்டது. ஒரு கட் அவுட் இல்லை. பாலாபிஷேகம் என எதுவுமே இல்லை.

தேசிய விருது கொடுத்தால் தற்போது அவமானதாகவே கருதுகின்றனர். புஷ்பா படத்தில் நான் கதாநாயகியை தான் ரசித்தேன். சாமி பாடலுக்கு அது நடித்திருந்தது சூப்பராகவே இருந்தது. துணியில்லாமல் நடித்திருந்தால் கூட அத்தனை கவர்ச்சி இருந்து இருக்காது. அப்படி நடித்தது அந்த பெண். லாபியில் கூட அந்த படத்திற்கு விருது கொடுத்து இருக்கலாம் என்றார்.

 

Related Articles

Next Story