இந்த படமாவது கை கொடுக்குமா?...விஜய் பட வாய்ப்பை தட்டி தூக்கிய எக்ஸ்பிரஷன் குயின்
தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகராக வலம் வருபவர் என்றால் அது விஜய் தான். இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பதால் பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் விஜய்யின் கால்ஷீட் கேட்டு காத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் விஜய் மிகவும் பொறுமையாகவும், கவனமாகவும் தான் கதைகளை தேர்வு செய்து வருகிறார்.
அந்த வகையில் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு திரைக்கு வர உள்ளது. இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் அதாவது தளபதி 66 படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன.
விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. படத்தின் இசையமைப்பாளர் தமன் என்பது மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தளபதி 66 படத்தின் நாயகியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராஷ்மிகா தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பதால் அவர் இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். தமிழில் அவர் நடித்த சுல்தான் படம் அட்டர் பிளாப் ஆனது. அதனால்தான் என்னவோ அவரை தமிழில் யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
முன்னதாக பைரவா, சர்கார் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகை கீர்த்தி சுரேஷ் தளபதி 66 படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் அந்த தகவலை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.