எல்லோர் முன்னிலையிலும் கன்னத்தில் பளார்விட்ட விஜயகாந்த்.. வன்மம் வளர்த்து பழிவாங்கிய வடிவேலு!..

by சிவா |   ( Updated:2023-08-21 08:24:08  )
vadivelu
X

தமிழ் சினிமா உலகில் விஜயகாந்தை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தவர் வடிவேலு மட்டுமே. விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர்.. எல்லோருக்கும் உதவும் குணம் கொண்டவர்... எல்லோருக்கும் சோறு போட்டவர் என சொல்பவர்களே அதிகம். ஆனால், வடிவேல் மட்டும்தான் விஜயகாந்தை கடுமையாக திட்டினார்.

விஜயகாந்த் மீது வடிவேலு அவ்வளவு வன்மம் கொண்டதற்கு பல காரணங்கள் இருக்கிறது. விஜயகாந்த், வடிவேலு இருவருமே மதுரையிலிருந்து வந்தவர்கள்தான். வடிவேலு சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடியபோது விஜயகாந்த் பெரிய ஸ்டாராக இருந்தார். ராஜ்கிரணின் அறிமுகம் ஏற்பட்டு ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் அறிமுகமானார் வடிவேலு.

இதையும் படிங்க: நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனர்களிடம் சண்டை போட்ட நடிகர்கள்! வாய்க்கொழுப்பால் பல்பு வாங்கிய வடிவேலு

அந்த படத்தில் நடிப்பதற்கு முன் ராஜ்கிரணின் அலுவலகத்தில் காப்பி, டீ வாங்கு கொடுப்பது, எடுபிடி வேலைகளை செய்வது என இருந்தவர் வடிவேலு என்பது பலருக்கும் தெரியாது. சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலு வேண்டாம் என இயக்குனரிடம் கவுண்டமணி சொல்லிவிட, விஜயகாந்திடம் சென்று வடிவேலு ஒப்பாரி வைத்தார். உடனே இயக்குனரை அழைத்த விஜயகாந்த் ‘இந்த படத்தில் எனக்கு குடை பிடிக்கும் வேடத்தை இவருக்கு கொடு’ என சொன்னார். அதோடு, வடிவேலுக்கு வேட்டி, சட்டையெல்லாம் வாங்கி கொடுத்தார்.

ஒருபடத்தில் விஜயகாந்துடன் வடிவேலு நடித்தபோது இயக்குனர் சொல்லும் வசனங்களை பேசாமல் அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதை பேசி வந்தார். அந்த இயக்குனர் இதை விஜயகாந்திடம் சொல்லிவிட்டார். ஒரு காட்சியில் வடிவேலு அப்படி பேசுவதை விஜயகாந்தே பார்த்து ‘இயக்குனர் சொல்றத பேசாம நீ ஏன் சொந்தமா பேசுற?’ என கேட்க வடிவேலு ‘அது நல்லா இல்லண்ணே’ என சொன்னார். நல்லா இல்லண்ணா அதை இயக்குனரிடம் சொல். அவருக்கு பிடித்திருந்தால் மட்டும் அதை பேசு’ என விஜயகாந்த் சொல்ல அப்போதும் வடிவேலு ‘அது நல்லா இல்லண்ணே’ என சொல்ல பளார் என கண்ணத்தில் ஒரு அறைவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மாமன்னன் மேடையிலேயே வடிவேலு சொன்ன அட்வைஸ்!. கடுப்பாகி முகம் சிவந்த மாரி செல்வராஜ்!..

அதில் வடிவேலு அதிர்ச்சியும், கோபமும் அடைந்தாலும் இது விஜயகாந்தின் படப்பிடிப்பு தளம். நாம் கோபப்படால் பிரச்சனை ஆகிவிடும் என புரிந்துகொண்டு அமைதியாகிவிட்டாராம். அதேபோல், ஒருமுறை ராஜ்கிரண் கஷ்டமான நிலையில் இருந்தபோது வடிவேலு அவருக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்தார். அதை பார்க்கும் எல்லோரிடமும் சொல்லியுள்ளார். இதைக்கேள்விப்பட்ட விஜயகாந்த் வடிவேலுவிடம் ‘ராஜ்கிரண் ஆபிசில் எச்சி சாப்பாடு சாப்பிட்டிக்கிட்டு இருந்தவன்தான நீ.. அவர் இல்லனா நீ இந்த நிலைக்கு வந்திருப்பியா?.. ஒருத்தருக்கு உதவுனா எல்லாத்துக்கிட்டயும் சொல்லக்கூடாது’ என அதட்டலுடன் அறிவுரை சொன்னாராம்.

இது எல்லாம்தான் வடிவேலுவுக்கு விஜயகாந்த் மீது கோபமாக திரும்பியுள்ளது. அதன்பின் விஜயகாந்த் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் எதாவது காரணம் சொல்லி தவிர்த்துவந்தார் வடிவேலு. ஒருகட்டத்தில் விஜயகாந்தை கடுமையாக திட்டி திரையுத்துறையின் கோபத்திற்கும் ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வடிவேலு சொன்ன ஒரு வார்த்தை!.. குடிப்பழக்கத்தை விட்ட முத்துக்காளை!.. இவ்வளவு நடந்திருக்கா!…

Next Story