ரட்சகன் - 2வில் இவர் தான் ஹீரோ!.. மாஸ் ஹீரோவை களமிறக்க துடிக்கும் இயக்குனர்..
தமிழ் சினிமாவிலேயே 1997 ஆம் ஆண்டு அதிக பட்ஜெட்டில் வெளியான படம் ‘ரட்சகன்’. இந்த படத்தை பிரவீன் காந்தி இயக்க குஞ்சுமோன் தயாரித்திருந்தார். முற்றிலும் வெவ்வேறு மாநில நடிகர்களை லீடு ரோலில் நடிக்க வைத்து பிரம்மாண்ட வெற்றி பெற்றார் பிரவீன் காந்தி.
நாகர்ஜுனா ஹீரோவாகவும் சுஸ்மிதா சென் ஹீரோயினாகவும் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையில் படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. பிரவீன் காந்தி படங்கள் பெரும்பாலும் பாடல்கள் மூலமாகவே மிகப்பெரிய வெற்றி பெறும். அதே போல ரட்சகன் படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.
இதையும் படிங்க : சிவகார்த்திகேயனை பார்த்து டிரெண்டை மாற்றிய சந்தானம்… ஓஹோ!! இதுதான் விஷயமா??
வைரமுத்து வரிகளில் ஒவ்வொரு பாடலும் கேட்போரை பரவசப்படுத்தின. ரொமாண்டிக் ஆக்ஷன் படமாக அமைந்த இந்த படம் தான் சுஸ்மிதா நடித்த முதலும் கடைசியுமான தமிழ் படமாகும். ஒரு பிரம்மாண்டமான படத்தை கொடுத்த இயக்குனர் பிரவீன் காந்திக்கும் இந்த படம் தான் முதல் அறிமுகம் படமாகும்.
முதல் படத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பிரவீன் காந்தியை பாராட்டதவர்களே இல்லை சினிமா உலகில். இப்படி ஒரு சிறப்பு மிக்க படமாக அமைந்த ரட்சகன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க நான் தயாராக இருக்கிறேன் என்று சமீபத்தில் பிரவீன் காந்தி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஃபீல் பண்ணாதீங்க பாஸ்..நான் நடிக்கிறேன்.. பாலாவுக்கு வாக்குறுதி கொடுத்த நடிகர்….
ஆனால் அந்த படத்தில் ஹீரோவாக நடிக்க தமிழ் சினிமாவில் இப்ப இருக்கும் ஒரு மாஸ் ஹீரோ நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். அந்த ஹீரோ யார் என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார். யாருமில்லை. நடிகர் விஜய் தான். நாகர்ஜுனா ஒப்பனிங்கில் நடந்து வருவாரு அதே போல சும்மா விஜய் நடந்து வந்தால் கெத்தா இருக்கும்.
ஆகவே ரட்சகன் இரண்டாம் பாகத்தில் விஜய் ஒப்புக் கொண்டால் கண்டிப்பாக படம் எடுக்க தயாராக இருக்கிறேன் என்று பிரவீன் காந்தி கூறினார்.